அம்மா பற்றிய கவிதை வரிகள்: Amma Kavithaigal In Tamil, அம்மா பற்றிய கவிதைகள், Amma pasam kavithai in tamil and more quotes, status, messages, sms in tamil language.
Table of Contents
அம்மா பற்றிய கவிதை வரிகள்
அன்னையின் அன்பில் அரவணைக்கப்பட்ட
அனைவருமே அன்பானவர்கள்..
அறிவானவர்கள்.. அழகானவர்கள்.!
நேசிக்கும் உறவுகள் யாவும்
நம் அம்மா ஆக முடியாது.

வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்
இருந்தாலும் நாம் ரசிப்பது
நிலவை தான்..
பூமியில் எத்தனை பெண்கள் இருந்தாலும்
நம்மை நேசிப்பது பெற்ற தாய் மட்டுமே.
எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா
கிடைத்து விடுகிறாள்.. ஆனால்
எல்லா அம்மாக்களுக்கும்
நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை.!

துன்பங்கள் வரும் தருணம்
தாயின் மடி சொர்க்கம்.
தாயை வணங்குவோம்
தாய்மையை போற்றுவோம்.

தாயில் சிறந்த கோவிலுமில்லை
நம் மனமெனும் கோவிலில் அமர்ந்து
எப்பொழுதும் துணையாக உதவி
தரணியிலே நடமாடும் தெய்வம் நம் தாய்
ஏழைத்தாய் போல் உலகில் யாரும்
சொந்தங்கள் இருப்பதில்லை
வலி மிகுந்த வரிகளை – அன்றே
பாடி வைத்தான் கவிஞன்

பட்டப் பகலில் நட்டநடு வெயிலில்
கால் கடுக்க கடினப்பட்டு
கல்லுடைத்து கதிர்வெட்டி
கஞ்சி குடித்து தன் வயிற்றை நிரப்பிடுவாள்
அல்லும் பகலும் அயராது உழைத்து
தான் பெற்றபிள்ளை ஞானத்தில் சிறப்புற்று
தன் பெயர் கூறக்கேட்டு
வலி மறந்து சிரித்திடுவாள்

உருவம் அறியாமல் நாம் கருவில் இருந்தபோதே
நமக்கு தெரியாமல் நமை காதல் செய்தவள்
நாம் எத்தனை தவறு செய்தாலும்
நமை அரவணைக்கும் ஒரே ஒரு ஜீவன் அம்மா
நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
ஓர் உன்னதமான தெய்வம் அம்மா.!

கல்லறையில் உறங்க சொன்னால்
கூட உறங்குவேன்.. அம்மா நீ
வந்து தாலாட்டு பாடினால்.
உலகிலேயே சிறந்த தெய்வம்
தாய் மட்டுமே..
உலகிலேயே மிகச் சிறந்தவர்கள்
தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.!

பத்து மாதம் சுமை, ஒரு மணிநேரம் வலி,
அனைத்தும் மறந்தாள்..
குழந்தையின் முதல் அழுகை
சத்தம் கேட்டதும்.. அம்மா.!
முகத்தை காணும் முன்பே
நேசிக்க தெரிந்தவள் தாய் மட்டுமே.

ஆழ்கடலில் ஆழம் பெரிதா!
நீண்டு நிற்கும் இமயம் பெரிதா!
இல்லை, நீ காட்டும் பேரன்பே
பெரியது என்பேன் நான் இவ்வுலகில் என்றும்.
நீ திட்டி நான் அழுததில்லை, நீ அடித்தும்
எனக்கு வலித்ததில்லை, வலிக்காமல்
அடிப்பதை தான் எங்கு நீ கற்றாயோ!
என் மனதை உடைக்காத ஓர் உயிரும் நீயே!

எத்தனை உறவுகள் தான் எத்திசையில்
தேடி வந்தாலும், ஏன் ஆயிரமாயிரம் அன்பை
பொழிந்தாலும், அது தாய் அன்பிற்கு ஈடாகுமா!
தோல்வி கனம் என்னை துரத்தும்போது
என் மனம் தேடுதே, உன் மடியில்
சாய்ந்து இளைப்பாறும் இடம் அதே அம்மா!

ஒத்த உசுருக்குள்ள எத்தனையோ
ஆசைகள் நீ சுமந்த! அத்தனையும்
உனக்காக அல்ல எனக்காக தானே அம்மா!
நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்,
தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம்
வரை அல்ல.. உன் ஆயுள் காலம் வரை.

Amma Kavithaigal In Tamil
இறைவன் எனக்கு கொடுத்த
முதல் முகவரி
உன் முகம் தான் அம்மா.
பத்து மாதம் சுமந்தாய் வயிற்றில்,
பல வருடங்கள் சுமந்தாய் வாழ்வில்,
இனி என்றுமே சுமக்க நினைக்கிறன்
என் நெஞ்சில் அம்மா.!

வயது வித்தியாசம் பார்ப்பதில்லை,
அம்மாவின் கொஞ்சலில் மட்டும்
இன்னும் குழந்தையாக..!
நீ ஊட்டிய நிலாச்சோற்றை காட்டிலும்,
வேறு அமிர்தம் நான் கண்டதில்லை
அம்மா.!

கண்களை மூடி பார்த்தாலும்,
கண்களை திறந்தாலும், கனவிலும்..
என் அன்னையே..
அவள் எப்போதும் நினைப்பது
என்னையே..!
இந்த உலகத்தின் உயிர்மூச்சாய்
அனைத்து உயிர்களின் சுவாசமாய்
வாழ்க்கையின் உயிரோட்டமாய்
பிரபஞ்சத்தின் ஆணிவேராய் இருப்பவள் அம்மா

மனிதர்களுள் மேன்மையானவளாய்
தெய்வங்களே வணங்கிடும் தெய்வமாய்
நடமாடும் அழகு தேவதையாய்
அன்பின் திருவுருவமாய் விளங்குபவள் அம்மா
பத்துமாதம் தன் பொன் வயிற்றில்
பத்திரமாய் எனை சுமந்து
வலிகள் பல தாங்கி
பத்திரமாய் எனை பெற்றெடுத்தவள் அம்மா

அந்தி பகல் கண் உறங்காது
அவளது உதிரத்தையே பாலாக்கி
தன் வாழ்வைத் துறந்து
எமக்காய் வாழ்பவள் அம்மா
பசி தூக்கம் இழந்து
உற்றார் உறவினரை மறந்து
அவள் நலம் பாராது
தன் குழந்தைகளுக்காய் வாழ்கின்ற தேவதை
தான் அறிவிலியாய் இருந்தாலும்
தன் பிள்ளை உயர்ந்தவனாய் விளங்க
சிறந்தவற்றை எல்லாம் அவனிற்கு அளித்திட
கடினமாய் உழைக்கும் உழைப்பாளி
எத்தனை காலங்கள் எத்தனை
ஜென்மங்கள் கடந்தாலும் உன்
அன்பு மட்டும் என்றும் குறையுமா அம்மா.
ஒவ்வொரு உறவுக்கும் ஒரு எதிர்பார்ப்பு
ஒன்று இருக்கும் ஆனால் உன் உறவுக்கு
மட்டும் தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லை அம்மா.
அம்மா பற்றிய கவிதைகள்
நான் அழுத பொழுது என்னை சிரிக்க
வைத்த முகம்..! என்றுமே என்னை
வெறுக்காத குணம்..! தவறுகளை
மன்னிக்கும் மனம்..! அளவு இல்லாத
பாசம்..! மற்றவர்கள் காட்டிடாதே
நேசம் உடையவள் தான் அம்மா.
அழுவதற்கு கண்கள், அணைப்பதற்கு
கைகள், சாய்ந்து கொள்ள தாயின் மடி
எப்பொழுதும் காத்திருக்கும்.
தோட்டத்திற்கு அழகு பூக்கள்!
என் வெற்றிக்கு அழகு அம்மா!
எனக்கு உயிர் தந்த உன்னை என்
உயிர் உள்ளவரை மறவேனோ!
மகன்களின் இதயக்கூட்டில்
உண்மையான ராணி அம்மா
நீ மட்டும் தான்.
உலகமே ஒன்றாகி தடையாக நின்றபோதும்
உயிராக தன் குழந்தைகளை காப்பவள்
காவல் தெய்வங்கள் பல உள்ள போதும்
தாய் போல் நமை காப்பவர் யாருமில்லை
தன் பிள்ளையை எத்தாயும் வெறுத்ததில்லை
வெறுப்பையும் அன்பாய் காட்டத் தெரிந்தவள்
ஒடி நொடி எமைப் பிரிந்தாலும்
உயிரைப் பிரிந்தாதுபோல் துடிப்பவள் அம்மா
வேகமும் விவேகமும் தந்து
எந்நாளும் நிகரில்லா சுவாசமாய் நிற்பவள்
ஈரேழுலகமும் போற்றி வணங்கிட
ஈரெட்டாய் நிறைந்தவள் அன்னை
அம்மா என்ற ஒற்றைச் சொல்லே
பெரும் பலம் தந்திடும்
அனைத்து வலிகளையும் களைந்து விடும்
அத்தனை அன்பு வாய்ந்தவள் அம்மா
அவள் இன்றி ஓரணுவும் அசையாது
மனிதன் முதல் விலங்கு வரை
அத்தனையிலும் அவளதிகாரம்
அகிலம் போற்றும் தேவதை அம்மா
தூக்கத்தில் உன்னைப் பற்றி
நினைப்பவள் காதலி..
தூங்காமல் கூட உன்னையே
நினைப்பவள் தாய்.!
தமிழில் அம்மா என்ற சொல்
எப்படி வந்தது என்று தெரியாது..
ஆனால் அன்பு என்ற சொல் நிச்சயம்
அம்மாவில் இருந்துதான் வந்திருக்கும்.
என்னை நடக்க வைத்து
பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட,
நான் விழுந்து விடக்கூடாது என்ற
கவனத்தில் தான் இருந்தது
உன் தாய் பாசம்.
நான் பார்த்த முதல் அழகியும் அவளே..
எனது உலக அழகியும் அவளே
என் அம்மா.
உலக அதிசயம் காண ஆர்வமில்லை..
அன்னையே உன்னை கண்ட பின்.
அம்மா அழகு என்றால் நீ..
அம்மா என்று அழைப்பதில்
அழகும் அழகு பெறுகிறது.
Amma pasam kavithai in tamil
அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீயே!
பாசம் என்ற சொல்லுக்கு பொருளும் நீயே..!
கருவறையில் வளர்ந்துக் கொண்டி
ருக்கிறது என சொல்லி சிரித்தாள்!
வளர்பிறையாய் உன் கருவில் வளரும்போதே
முழுநிலவாய் நீ என்னை தொட்டு ரசித்தாய்!
பிறக்கும் முன்னே உன் வலி கொண்டு
உலகை கண்டேன் இறந்த பின்னே உன்
எதிர்நின்று என் உலகை காண்கிறேன் அம்மா.
தோல் சாய்ந்து நீ என்னைத் தாலாட்டு
பாடும்போது சொர்க்கத்தில் இருப்பது
போல ஆனந்தம் கொண்டேன் அம்மா.
கருவறையில் இருந்த உணர்வை
உன் மடியில் உணருகிறேன் அம்மா.
பெற்றவர்கள் பெருமை சொல்லிட
பிள்ளைகள் தான் மறந்தாலும் – தாய்
தன் பிள்ளை பெருமை பாட
என்றும் மறந்ததில்லை
முதியோர் இல்லத்தில் இருந்தாலும்
தன் பிள்ளை நலமாய் வாழ வேண்டிடுவாள்
ஆயிரம் கவி பாடினாலும் அன்னை புகழ்பாட
வார்த்தைகள் இருப்பதில்லை
உடலிற்கு உயிர் கொடுத்து
உலகத்தில் வாழ வழி செய்த அன்னையை
உயிர் உள்ளவரை உளம் போற்றி
உத்தமராய் வாழ்ந்திடுவோம்
எங்கே பார்த்தாலும் காதலர்கள்,
என்னை தான்
காதல் செய்ய யாரும் இல்லை என்று
வீடு திரும்பினேன்..
காத்திருந்தால் எனக்காக சாப்பிடாமல்
என் அம்மா.!
அழுக்கு தேகம், கலைந்த கூந்தல்,
கிழிந்த சேலையிலும் கடவுளாக
தோன்றுகிறாள் அம்மா.
கருப்பை ஒன்றை காதலோடு சுமக்கிறாள்..
வலி என்று தெரிந்தும் வரம் கேட்கிறாள்..
மறுபிறவி பெற்று உனக்கு
உயிர் தருகிறாள் அன்னை.
நீ உன் பிறவியை, எனக்காக தியாகம்
செய்யத் துணிந்து விட்டாய்.. உனக்காக
நான் என்ன செய்யப் போகிறேன் அம்மா.
கடவுள் தந்த உயிர் என்று சொல்லவா!
இல்லை கடவுள்களிலும் உள்ள உயிர் என்று சொல்லவா!
நிகரில்லா என் சுவாசம் நீயே!
என் மனம் தினம் ஏங்கும் அன்பும் நீயே அம்மா!
உருவம் அறியா கருவிலும் என்னை
காதல் செய்தவளே! உன்னைப் பற்றி
எழுதாமல் நான் எழுதும் எழுத்துக்கள்
தான் கவிதை ஆகுமா!
பிறக்கும் போது உன் வலியை
உணர்ந்து தான் அழுது நான்
பிறந்தேனோ தாயே!
பாலூட்டி சீராட்டி பசி மறந்து
என்னை காத்தாயே! அம்மா என
நான் அழைக்கும் ஒரு சொல்லுக்கு!
ஆயிரம் கவிதைகள் உனக்காக
எழுதினேன் ஆனால், நீயோ அம்மா
என்ற ஒரு வார்த்தை கவிதைக்குள்
அனைத்தையும் அடக்கி கொண்டாய்.
நிலா காட்டி சோறு ஊட்டும்போது
தெரியாது அம்மா என்னையே சுற்றி
வந்த நிலா நீ தான் என்று.
இவ்வுலகில் அன்பை மட்டுமே
எதிர்பார்க்கும் ஒரு உறவு நீ மட்டுமே.
கருவில் சுமந்த உன்னை என் வாழ்நாள்
வரை மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்
ஏனெனில் உன் கடமைக்கு அல்ல உன்
பாசத்திற்கு அம்மா.
வேகமும் விவேகமும் கற்று நீ
தந்தாயே உன்னாலே நடந்தேனே
உன்னாலே நான் இன்று பயின்றேனே
தாய் தமிழை நன்று.
என் பிள்ளை அழகு என்று ஊரெல்லாம்
நீ சொல்ல! கரும்புள்ளி ஒன்று மழலையில்
என் கன்னத்தில் நீ வைத்தாயே! கர்வத்தில்
சிரித்தேனே அழகு என்று நான் என்னை எண்ணி!
சிறுவயதிலே கடைவீதியில் உன் கரம்
பிடித்து நான் நடந்த நாட்களே, உலகை
சுற்றிய நொடிப் பொலுதாய் என் மனம்
உணர்ந்ததே அம்மா!
இரவு பகல் பாராமல் ஒளிவிளக்காய் நீ
இருந்தாய் உன் நிழலிலும் என்னை
மிதிக்காமல் கண் விழித்துப் பார்த்துக் கொண்டாள்.
நான் கடவுளிடம் மனதார வேண்டுகிறேன்
மீண்டும் நீயே என்னை கருவில் சுமக்க.
என்ன தவம் செய்தேன் உனக்கு நான்
மகனாய் பிறக்க! என்ன வரம் பெற்றேன்
நீ என் தாயாய் வந்திட! அடுத்த பிறவியிலும்
இதே வரம் பெற்றிட இறைவனிடம் வேண்டுகிறேன்.
நீ மண்ணில் உருவாகி மறைந்தாலும்
கூட உன் ஆத்மா என்னை கவனித்துக்
கொண்டே தானே இருக்கும் அம்மா.
நான் வாழ்க்கையில் தோற்றுக்
கொண்டே இருந்தாலும் என்னை நீ
ஜெயிக்க வைத்துக் கொண்டே தான்
இருப்பாய் என் அம்மா.
நான் நோய் என்று படுத்து விட்டால்
அந்த நோய்க்கே சாபம் விட்டவள் நீதானே அம்மா.
ஆயிரம் சாமிகள் என் கண்ணுக்கு
தெரிந்தாலும், என் முதல் சாமி நீதானே அம்மா.
நான் எத்தனை முறை கீழே விழுந்தாலும்
என்னை தூக்கி விட ஓடோடி வருபவள்
நீ மட்டும் தானே அம்மா.
மறுபிறவி என்ற ஒன்று இருந்தால், அதில் காலணியாய் பிறக்க வேண்டும்! ஏன் தெரியுமா? என்னை சுமந்த அன்னையை சுமப்பதற்காக!
தனக்காக எதுவும் வேண்டாமல், தான் பெற்ற பிள்ளைகளின் நலனுக்காக மட்டுமே வேண்டும் ஓர் உன்னத ஓவியம், அம்மா!
படுக்கை சுருட்டும் விடியல் முதல், எரிவாயு அணைக்கும் இரவு வரை ஆண்டு அடக்கும் அதிகாரி அவள்! யாருக்கு என்ன அளவென்று உப்பு ஒரப்போடு ஒப்பந்தமிட்டவள்!
அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்! தொலைந்து போனபின், தேடினாலும் கிடைக்காத அன்பின் பொக்கிஷம் “அம்மா”