கண்ணீர் அஞ்சலி கவிதை வரிகள் | Kanner Anchali Kavitai

கண்ணீர் அஞ்சலி கவிதை வரிகள்: Kanner Anchali Kavitai, இரங்கல் கவிதைகள், இறப்பு கவிதைகள் வரிகள், ஆழ்ந்த இரங்கல் கவிதைகள், Kanner Anchali Kavithai.

கண்ணீர் அஞ்சலி கவிதை வரிகள்

புன்னகை பூ ஒன்று பூக்காமல்
உதிர்ந்தது சில்லறை சிதறும்
சிரிப்பழகி
சிலையாய் தூங்குகிறாள்
“வா இஞ்சை” என அழைக்கும்
எம் தாய் சொல்லாமல்
போய் விட்டாள் – காலனுக்கும்
தெரியாமல் இறைவன் வந்துன்னை
இரவோடு அழைத்துச் சென்றானோ
பசியோடு வருவோர்க்கு ருசியாக
சுவையாக பரிமாறி நகைச்சுவையோடு
பேசி புன்னகையோடு
வழியனுப்பி வைப்பாய் – விழி நீரோடு
உனை அனுப்பி வைக்கிறோம்
அம்மா உன் ஆத்மா சாந்தி அடையட்டும்
எம் உயிர் உள்ளவரை உன் ஆத்மா
எம்மோடு கதை பேசும்.

கற்றுத்தந்தவள் நீ!!
பற்று வைத்தவளும் நீ!!
இனிய தருணங்களை
எமதாக்கியவளும் நீ!!
இற்றுவிடா இனிய வாழ்வை
எமக்களித்த..
அதில் நீ அற்றுப்போனதேன்..
அம்மா!!
உதித்த நாளில் உதிர்ந்த
எம் கோயிலே..
குடியிருந்த நாம் தவிக்கிறோம்..
குதூகலிக்க நீயின்றி!!
நெஞ்சில் வலிமையுடன்
நீங்காத நினைவுகளுடனும்..!

காலனின் கட்டளையில் அமைதியாய்
போனதொரு சிரித்த முகம்
கடல் கடந்து கண்ணீர் விடுகிறாய்
எம் அன்பு நண்பா..
உன் கண்ணீர் துடைக்க
நாமில்லையே
இங்கு செய்வதறியாது
தடுமாறி நிற்கிறோம் வாழ்க்கை
சக்கரத்தில் உயிர் உதிர்வு
நிச்சயமானது என்றெண்ணி
பிரிந்துவிட்ட உன் தந்தையின்
ஆத்மா இறையின் பாதங்களில்
சாந்திபெற பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!!

இரங்கல் கவிதைகள்

ஆலமரமொன்று அடி சாய்ந்ததோ வேரோடி விழுது விட்ட பெரு விருட்சமே எமை பாரோடு தவிக்க விட்டு பாதியிலே போனதேனோ வானத்து நிலவாய் வலம் வந்து அரும்பணியாற்றிய அற்புதமே இப்பிறவியில் அல்ல எப்பிறவியிலும் யாம் காணோம் உமைப் போன்ற அருமருந்தை எம் உயிரான உயிர்ப்பூவே சிதைத்தவன் யார்? அவன் காலனேயாயினு கழுவலேற்றுவோம் கால தேவன் எம் ஊருக்கு உவந்தணித்த உத்தமரே நீரின்றி தவிக்கும் எம் நிலையை பாரும் இனி இப்புவியில் நாம் எப்போ உம் முகம் பார்ப்போம்.

மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் – நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை.. பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டு சென்றீர் ஐயாவே.!! உங்கள் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!!

பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்ன விதிவிலக்கா? – இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவன் செய்த சதிக்கணக்கா? பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானே இறைவனை தினம் தினம் வேண்டி வந்தோம் அவ் வரத்தினை தந்திட மறுத்த இறைவன் உன் உயிரினை மீட்டுத் தருவானா? ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

பூத்த உந்தன் கொடிகள்
தவிக்குதய்யா – பூவுலகத்தோர்
மனம் வெடிகுதய்யா!!
பூக்காதோ மீண்டும் உந்தன்
வாழ்வு என்று – பூவையர்
புலம்பி நெஞ்சில் அடிக்கின்றனரே..
ஆண்டவா ஏன்தான் பறித்தாயோ!!
அன்பைத்தான் முறித்தாயோ!!

இறப்பு கவிதைகள் வரிகள்

கோபுரம் சாய்ந்ததே கொடுந்துன்பம்
நேரிட்டதே எங்கள் கோலங்கள்
அழிந்ததுவே ஏது கதி தாங்க முடியாத
துயரத்தில் தவிக்குதையா எம் நெஞ்சு
அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா
இறைபதம் சேர இறைவனை
இறைஞ்சுகிறோம்!!
ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!

அம்மா என்ற உறவு அற்புதமானது
அன்புடன் தான் வளர்த்து
அறிவையும் பண்பையும் நிறைத்து
வளமான வாழ்க்கையை
வளமார உளமார வாழ்ந்திட
வாழ வைத்த அன்புத் தெய்வமே
அம்மா பூ உலகிலிருந்து
விடை பெற்று விண்ணுலகம்
விரைந்தீர்களோ.!
எங்கள் மனமெல்லாம் தங்களின்
தங்கமான நல்வாசம் வீசிட
விரைந்த உங்கள் ஆத்மா நன்னிலை
எல்லாம் பெற்று தில்லைக் கூத்தன்
திருவருளால் திருவடி அடைய சிந்தையால்
சிரம் தாழ்த்தி வேண்டுகிறோம்.!

அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து
பக்குவமாய் வழி நடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய்
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தீர்
ஏனோ இறைவன் இடை நடுவில்
பறித்து விட்டான்..
துன்புற்றோர் துயர் துடைத்து
துணைக்கரமாய் அடைக்கலம்
தந்த உம்மை
ஆண்டவன் ஏனழைத்தான்
பண்புள்ளோரை பல காலம்
வாழவிடக் கூடாதென்றோ?
என் செய்வோம்
இறைவன் சித்தம் இது
இனி காணமுடியாத சோகநிலையோடு
இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.

ஆழ்ந்த இரங்கல் கவிதைகள்

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்.

வார்த்தை தடுமாறுகின்றதே
நேற்றுக் கண்ட உனை நினைத்து
நெஞ்சம் உருமாறுகின்றதே!!
காந்தமாய் எமையீர்த்த உனை
காலனுனை கவர்ந்து சென்றதேனோ?
காலமெல்லாம் உம் உறவு
நினைத்துருக காததூரம் எமைவிட்டு
சென்றதேனோ? – நாமோ!! இன்று
மங்காத உன் நினைவால்
மயங்கியே நிற்கின்றோம்.

அன்புக்கும் பண்பிற்கும் ஓர் தாயாய் ஆளாகி இப்புவியில் பெருமை சேர்த்து இல்லறத்தில் இன்பமாய் வாழ்ந்து நல்லறத்தில் ஆண்டு பல கழிந்து இன்புற்று வாழும் காலம் இறைவனுக்கும் இனிபோதும் என்றாகிவிட்டதன்றோ விதியின் வினைப் பயனால் விண்ணுலகிற்கு சென்றுவிட்டீர்கள் அன்பான பேச்சு பண்பான குணம் பாசமுடன் அரவணைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவரே, உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறுவதுடன் ஆண்டவனை பிராத்திக்கிறோம்.

பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்பது என்ன விதிவிலக்கா? இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவன் செய்த சதிக்கணக்கா? பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானே இறைவனைத் தினம்தினம் வேண்டி அவ் வரத்தினை தந்திட மறுத்த இறைவன் உன் உயிரினை மீட்டுத் தருவனோ? ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!

கண்ணீர் அஞ்சலி கவிதைகள்
அன்பே உருவான கருவில் அவதரித்து இன்பம் தழைத்தோங்க இன்முகத்தால் வரவேற்று பண்பை பணிவை பார்போற்றும் உழைப்பை எமக்கு புரிய வைத்து அன்பாய் ஒரு கொடியின் மலர்களாய் அவனியிலே இன்புற்று வாழ்வாங்கு வாழ்ந்து இன்று காலன் உமை அழைத்திட எங்கு சென்றீர் சென்ற வழி தேடுகிறோம் வருவீரோ எம் மனக்குறை தீர்க்க.!

காணாத கண்ணிற்கு கரைந்து போன கற்பூரமே வாழ்நாளில் மறவாது வடிக்கிறேன் கண்ணீர். ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!

காலனவன் தன் கணக்கை சாலவே
செய்யவே மண் விட்டு
வானம் சென்றீரோ?
வானம் சென்ற உமை நினைத்து
கண்ணீர் விட்டு கரைகிறோம்
ஆற்றுவாரில்லை ஆறுதல் சொல்ல
சொற்கள் இல்லை.

அகிலத்திற்கு அதிபதி
அன்னை பராசக்தி
அன்பு உள்ளத்திற்கு
அதிபதி அம்மா
அன்போடு பழகி நேசத்தோடு
அனைவரையும் அரவணைத்து
அன்பைக் கற்றுக் கொடுத்தவர்
அம்மா
அயலவரையும் உறவுகளையும்
உள்ளத்தால் இணைத்து
மனதால் மகிழ்வு கண்டவர்
நெஞ்சார நேசித்து மனமார வாழ்ந்த
எங்கள் அம்மாவே பூமியை விட்டு
விடை பெற்றாலும் புத்திர புதல்விகளின்
மனதை விட்டு அகலவே மாட்டீர்கள்
தங்கள் ஆத்மா நன்னிலை பெற்று
தில்லை கூத்தன் திருவடியை
அடைய வேண்டுகிறோம்.

Kanner Anchali Kavithai

பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே.

மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம்.

அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்
பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாக
இருந்த உத்தமரே!!
மண்ணோடு உங்கள்
பூவுடல் மறைந்து விட்டாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
இதயங்களில் இருந்து
ஒருபோதும் மறைவதில்லை.

நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே
அன்பானவனே உன்
பெயரும் விளங்கும்!!
கல்மனம் படைத்த காலனவன்
கவர்ந்தானோ உன் உயிரை
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.

அகிலத்திற்கு அதிபதி
அன்னை பராசக்தி
அன்பு உள்ளத்திற்கு
அதிபதி அம்மா
அன்போடு பழகி நேசத்தோடு
அனைவரையும் அரவணைத்து
அன்பைக் கற்றுக் கொடுத்தவர்
அம்மா
அயலவரையும் உறவுகளையும்
உள்ளத்தால் இணைத்து
மனதால் மகிழ்வு கண்டவர்
நெஞ்சார நேசித்து மனமார வாழ்ந்த
எங்கள் அம்மாவே பூமியை விட்டு
விடை பெற்றாலும் புத்திர புதல்விகளின்
மனதை விட்டு அகலவே மாட்டீர்கள்
தங்கள் ஆத்மா நன்னிலை பெற்று
தில்லை கூத்தன் திருவடியை
அடைய வேண்டுகிறோம்.

புன்னகை பூ ஒன்று பூக்காமல்
உதிர்ந்தது சில்லறை சிதறும்
சிரிப்பழகி
சிலையாய் தூங்குகிறாள்
“வா இஞ்சை” என அழைக்கும்
எம் தாய் சொல்லாமல்
போய் விட்டாள் – காலனுக்கும்
தெரியாமல் இறைவன் வந்துன்னை
இரவோடு அழைத்துச் சென்றானோ
பசியோடு வருவோர்க்கு ருசியாக
சுவையாக பரிமாறி நகைச்சுவையோடு
பேசி புன்னகையோடு
வழியனுப்பி வைப்பாய் – விழி நீரோடு
உனை அனுப்பி வைக்கிறோம்
அம்மா உன் ஆத்மா சாந்தி அடையட்டும்
எம் உயிர் உள்ளவரை உன் ஆத்மா
எம்மோடு கதை பேசும்.

கற்றுத்தந்தவள் நீ!!
பற்று வைத்தவளும் நீ!!
இனிய தருணங்களை
எமதாக்கியவளும் நீ!!
இற்றுவிடா இனிய வாழ்வை
எமக்களித்த..
அதில் நீ அற்றுப்போனதேன்..
அம்மா!!
உதித்த நாளில் உதிர்ந்த
எம் கோயிலே..
குடியிருந்த நாம் தவிக்கிறோம்..
குதூகலிக்க நீயின்றி!!
நெஞ்சில் வலிமையுடன்
நீங்காத நினைவுகளுடனும்..!

Leave a Comment