சிறந்த தமிழ் பொன்மொழிகள்: Tamil Ponmozhigal, சாதனை பொன்மொழிகள், புதிய பொன்மொழிகள், பொன்மொழி வரிகள், தன்னம்பிக்கை பொன்மொழிகள் in tamil.

Table of Contents
சிறந்த தமிழ் பொன்மொழிகள்
கனவுகள் ஒரு சுருக்க நிகழ்வு.
கனவுகள், பிரபஞ்ச மனதை அறிந்து கொள்ள உதவும் ராஜபாட்டை.

அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும். தவறுகள் அதற்குரிய செலவுகள்.
தன் பிள்ளைகளுக்கு, பிறர் மீது அன்பு செலுத்த கற்றுக் கொடுப்பதன் ஊடாக தாய், தன் கடமையை செய்து முடிக்கிறாள்.

ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்.
மனிதராகப் பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்.

முட்டாள்களின் மிகவும் கேட்ட குணமாக இருப்பது தன் குறையை மறந்து விட்டு பிறர் குறையை காண்பதே.
தவறுகளை மன்னிக்கலாம் ஆனால் ஒரு பொழுதும் மறக்கக்கூடாது.

ஒரு நிம்மதியான மனிதன் வாழ்க்கையில் ஒரு புத்தகமும் ஒரு தோட்டமும் இருந்தால் மட்டுமே போதும்.
வாழ்க்கையில் பல தோல்விகளையும் பல முயற்சிகளையும் செய்தவன்தான் இறுதியில் வெற்றி காண்பான்.

Tamil Ponmozhigal
புத்தகம் இல்லாத வீடு – ஆன்மா இல்லாத கூடு
எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது.

தன் குற்றம் மறப்பதும் பிறர் குற்றம் காண்பதுமே முட்டாள்தனத்தின் விசேஷ குணம்.
ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை

இன்ப வாழ்வுக்கு வழி அமைதி.
எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள், நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.

எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்
-சிசரோ
பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.

தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.
-ஒரிசன் ஸ்வெட் மார்டென்
உன்னிடம் பணம் இருந்தால் நீ ஒரு நாயை வாங்கி விட முடியும் ஆனால் அதன் வாலை நீ அசைக்க வைக்க வேண்டுமென்றால் நீ அதனிடம் அன்பை செலுத்தினால்தான் முடியும்.

வாழ்வு ஒரு கலை அதை விஞ்ஞானமாக வாழ முடியாது.
மிக சிறிய விடயங்களைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.

சாதனை பொன்மொழிகள்
உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர்.
நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பர்.

எனக்கு முட்டாள்கள் செய்யும் பரிசோதனைகள் பிடிக்கும். நான் அதை தான் எப்பொழுதும் செய்கிறேன்.
உன் வீட்டில் புத்தகம் இல்லை என்றால் உன் உடம்பில் ஆன்மா இல்லாததற்கு சமம்.

புத்திசாலித்தனமாக யோசிப்பதும் சொதப்பலாக செய்து முடிப்பதும் மனிதனின் பிறவிக் குணமாகும்.
-அனடோல் பிரான்ஸ்
உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது முக்கியமில்லை அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது தான் முக்கியம்.

வாழ்க்கையின் சிறந்த பகுதி அவ்வப்போது அன்புடன் சிறு சிறு செயல்களைச் செய்வதுதான்.
-வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
வாழ்வு ஒரு கலை அதை விஞ்ஞானமாக வாழ முடியாது.
-சாமுவேல் பட்லர்

நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை.
-ஒரிசன் ஸ்வெட் மார்டென்
வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்.

புதிய பொன்மொழிகள்
கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி, அதைத் தாமதப்படுத்துவது.
அதிர்ஷ்டம் வீரனை கண்டு அஞ்சுகிறது. கோழைகளை திணறடிக்கிறது.

சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான்.
நகரங்களை உருவாக்க வருடங்கள் ஆகும். அழிப்பதற்கு மணித்துளிகளே போதும்.

வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.
நீங்கள் எப்பொழுதும் என்ன பேசினாலும் அந்த வார்த்தையின் ஆழ்ந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு பேசுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் போய் ஒன்று இல்லை என்றால் வாழ்க்கையானது சலிப்பாக மாறிவிடும்.
உன்னுடைய லட்சியத்தை நீ அறிந்து கொண்டால் உன்னை ஒருவராலும் அழிந்துவிட இயலாது.

நேரடியாக உச்சிக்கு செல்ல வேண்டும் என்று முயற்சித்தவர்கள் தான் இன்று துயரத்தின் பாதாளத்தில் இருக்கிறார்கள்.
இவ்வுலகில் விஞ்ஞானம் எந்த அளவிற்கு முன்னேறி வருகிறதோ அந்த அளவிற்கு மனிதனின் பொது அறிவு முன்னேற வேண்டும் இல்லாவிட்டால் பேரழிவு நிச்சயம்.
காதலின் முடிவுக்கு எல்லா உணர்ச்சிகளும் தலை வணங்குகின்றன.
-சிசரோ
கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை. கனவு எண்ணங்கள் அபத்தமானவை அல்ல, நாம் மனநோயாளியாக இல்லாத வரை.
பொன்மொழி வரிகள்
ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது.
ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது.
மன அமைதியில் அடங்கியதே இன்ப வாழ்வு.
கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.
சின்ன விசயங்களை கண், காது, மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும். ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும்.
உங்கள் லட்சியத்தில் வெற்றி காண வேண்டும் என்றால் இலட்சியத்தை உங்களுக்குள்ளே சொல்லுங்கள் அதன் பின்பு அதற்கு என்ன முயற்சி எடுக்க வேண்டுமோ அதை செய்யுங்கள்.
உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்.
தீய எண்ணங்களின் விதையை நீங்கள் வளரும் பொழுதே வெட்டி விடுங்கள் இல்லை என்றால் அது அழிவின் விளிம்புக்கு உங்களை வளர்த்து விடும்.
நாளைக்கு தள்ளி போடும் வேலைகளை மட்டும் தள்ளிப் போடுங்கள் இன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளை இன்றே செய்து முடியுங்கள்.
-ஆஸ்கார் வைல்ட்
ஒரு போதும் பின்னோக்கிப் பார்க்காதீர்கள். நீங்களாக அந்தத் திசையில் போக நினைக்காதவரை.
தகுதி உடையது தப்பிப் பிழைக்கும்.
நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரன மனிதன் தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.
தன்னம்பிக்கை பொன்மொழிகள்
வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டால், குறைந்தபட்சம் சிரிப்புக்களால் தூவுங்கள்
கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்!
பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள், அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்!!
மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.
கவலையைக் கடன் வாங்குவது உன் இயல்பாக இருக்கலாம். ஆனால் அதை அடுத்தவனுக்குக் கடன் கொடுக்காதே.
-இரட்யார்ட் கிப்ளிங்
பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்கமுடியாது.
மனிதர்கள் அவர்களின் செயல்பாடுகளால் மட்டுமே வாழ்கின்றார்கள். தத்துவங்களால் இல்லை.
-அனடோல் பிரான்ஸ்
சிறந்த மனிதர்கள் அவர்களுடைய சூழ்நிலைகளை அவர்களுக்கு ஏற்றவாறு வாய்ப்புகளாக மாற்றிக் கொள்கிறார்கள் அதனுடன் வாழ்க்கையிலும் வெற்றி பெறுகிறார்கள்.
நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. எதற்காவது உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
-ஹென்றி டேவிட் தொரேயு
ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளிக்கிவிடுகிறாள்.
உங்கள் வார்த்தைகளை சிந்திக்காமல் பேசுவதே இலக்கின் மீது குறி பார்க்காமல் அம்பை விடுவதற்கு சமம் ஆகும்.
வாழ்க்கை என்பது குறைந்த சிந்தனைகளை அறிந்து கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை ஆகும்.
இன்ப வாழ்வுக்கு வழி அமைதி.
-சிசரோ
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை.
-ஆஸ்கார் வைல்ட்
சமூகம் நமக்கு என்ன சொல்கிறதோ அதை சமூகமே செயல்படுத்தாது.
எல்லோராலும் மதிக்கப்படும் புத்தகம் பெரும்பாலானோரால் படிக்கப்படுவதில்லை.
பொய்யனை ஒருபோதும் யாரும் நம்பப்போவதில்லை, அவன் உண்மையே பேசினாலும் கூட.
-ஈசாப்
எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது.
நம்மால் கிணற்றில் விழுந்து விட்டதே என்று கவலை கொள்வதை விட அந்த கிணற்றில் நிம்மதியாக குளிக்கலாம்.
நம்முடைய சோதனைகள், துக்கங்கள் மற்றும் வருத்தங்கள் ஆகியவையே நம்மை வளரச்செய்கின்றன.
ஒரு விருப்பம் ஒரு வழியை கண்டறிகின்றது.
-ஒரிசன் ஸ்வெட் மார்டென்
போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள்வென்ற பின்பு விடா முயற்சி என்பார்கள்.
போராடி கிடைக்கும் தோல்வி கூடகொண்டாடப்பட வேண்டிய வெற்றி தான்.
கடனோடு காலையில் எழுவதை விடபாண்ட்டினியோடு இரவில் படுப்பது மேல்
உலக வரலாற்றை படிப்பதை விடஉலகில் வரலாறு படைப்பதே இனிமை.