தனிமை கவிதை வரிகள் – Alone Quotes Tamil – Images

தனிமை கவிதை வரிகள்: Thanimai Quotes In Tamil, தனிமை கவிதை வரிகள், Sad Alone Quotes In Tamil, Alone Quotes Tamil and more status, quotes, sms, messages in tamil language.

தனிமை கவிதை வரிகள்

எதுவும் சில காலம் தான்
இதைப் புரிந்து கொண்டால்
தனிமை இனிமையாக
இருக்கும்.

இன்பத்திலும் துன்பத்திலும்
மனம் விட்டுப் பேச
துணை இல்லாத
போதுதான் தெரியும்
தனிமையின் கொடூரம்.

Alone Quotes Tamil

தனிமை என்பது
என்னைப் பைத்தியம்
ஆக்கிக் கொண்டிருக்கின்றது..
ஆனால் நீயோ அமைதியாக
இருந்து வேடிக்கை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

தனிமை எனக்கு மிகவும்
பிடிக்கும் காரணம்..
ஏமாற்றிச் செல்லும்
உறவுகளை விட
தனிமையே நம்முடன்
பலகாலம் வாழ்கின்றது.

Alone Quotes Tamil
Alone Quotes Tamil

பல கஷ்டங்களை கண்டு
மரத்துப் போன என்
இதயத்திற்கு தனிமையே
போதுமானதாக இருக்கின்றது.

போலியான உறவுகள் பலருடன்
கூடவே பயணிப்பதனை விட
யாருமற்ற தனிமையே சிலநேரம்
உண்மையான உறவாகிவிடும்

Alone Quotes Tamil

உணர்வுகளிற்கு மதிப்பளிக்காமல்
உண்மையான பாசத்தை தராது
உறவுகளே ஒதுக்கிடும் போது
உருவாகுவதே கொடுமையான தனிமை

தனிமை இன்பமானது
தனிமை கொடுமையானது
தனிமையில் இனிமை காணப் பழகிவிட்டால்
அது ஒரு தனி உலகம்

Alone Quotes Tamil

உறவுகள் அருகில் இல்லாமல்
தனியாக அழுது முடித்த பின்
உருவாகும் தன்னம்பிக்கை
வாழ்க்கையில் ஈடு இணையில்லாதது

சுற்றி உறவுகள் பல இருந்திட்ட போதும்
சிலரோடு பேசி சிரித்திட்ட போதும்
உள்ளுக்குள் தனியாய் உணர்ந்து
யாரும் இல்லாதது போல உணர வைப்பது தனிமை

தனிமை கவிதை வரிகள்

அருகில் இருந்தும்
போலியாக இருக்கும்
உறவுகளுடன் இருப்பதை விட..
தனிமையில் இருப்பது மேலானது.

தனிமையின் வேதனையை
உணர்வதற்கு யாருடைய
பிரிவும் அவசியமில்லை..
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க
தெரியாத உறவுகள் போதும்.

தனிமை கவிதை வரிகள்

வலிகளையும்
வேதனைகளையும் தரும்
உறவுகளுடன்
இருப்பதை விட.. தனிமையில்
இருப்பது மன நிம்மதியை
தரும்.

போலியான உறவுகளுடன்
பொய்யான வாழ்க்கை
வாழ்வதை விட.. தனிமை
ஒன்றும் கொடூரமானது
இல்லை.

தனிமை கவிதை வரிகள்

தனிமை என்பது தனியாக
இருப்பதில்லை.. அனைவரும்
இருந்தும் நமக்காக யாரும்
இல்லாது போல்
உணர்வதே தனிமை.!

நம்மை சுற்றி பல உறவுகள்
கூடி இருந்து களித்திட்ட போதும்
நமக்காக யாருமில்லாதது போல
உணர வைப்பதே தனிமை

தனிமை கவிதை வரிகள்

Thanimai Quotes In Tamil

கண்களில் வழிந்தோடும் கண்ணீர்
என் கன்னங்களில் உருண்டோட
பொதி சுமக்கும் சுமைதாங்கியாய்
வெறிக்கின்றேன் இவ்வுலகை

நினைவுகளே மனதின் ரணங்களாக
நித்தமும் எமை தொடர்ந்திட
நேசிப்போர் யாருமிலாமல்
கண்ணீரால் கசிந்துருக வைத்திடும்

தனிமை கவிதை வரிகள்
தனிமை கவிதை வரிகள்

பறவைக்கும் கூடு உண்டு
பாதைக்கும் முடிவுண்டு
ஊசலாடும் என் மனதை
ஆற்றுகைப் படுத்துவோர் யாருளர் இவ்வுலகில்?

நாம் கண்ட கனவுதனை இழந்து
நமக்கான உறவுகளை இழந்து
நாதியற்ற வழிப்போக்கனாய் – நம்மை
அலைய வைத்திடும் இந்த பொல்லாத தனிமை

தனிமை கவிதை வரிகள்

தனிமை எனக்கு மிகவும்
பிடிக்கும் காரணம் அங்கு
என்னை காயப்படுத்த
யாரும் இல்லை.

தூக்கம் வந்தாலும் தூங்காமல்
நமக்கு பிடித்தவர்களை
தனிமையில்
நினைத்துக்கொண்டு இருப்பதும்
ஒரு தனி சுகம் தான்.

தனிமை கவிதை வரிகள்

பேச யாரும் இல்லை
என்பதை விட பேசுவதைக்
கேட்க யாருமில்லை
என்பது தான்
தனிமையின் கொடூரம்.

இன்று நானும்
தனிமையில்.. நான்
காட்டிய அன்பும்
தனிமையில்.. என்
வாழ்வும் தனிமையில்..!

தனிமை கவிதை வரிகள்

தனிமை என்பது நான்
தேடிக்கொண்ட சாபம்
அல்ல நான் என்
உயிருக்கும் மேலாக
நேசித்தவர்கள் எனக்கு
அளித்த பரிசு.

வாழ்க்கையின் ஒவ்வொரு தடையையும்
தனியே கடந்து வருகின்ற போது
யாருமளிக்காமலே தனிமை
தத்தெடுத்து விடும் நம்மை

தனிமை கவிதை வரிகள்

பல வெற்றிகளின் ஆணி வேராய்
பல படைப்புக்களின் தோன்றுமிடமாய்
பல சிறப்புக்களின் காரணமாய்
சில தனிமைகள் அமைந்திடும்

யாரும் அளித்திட்டால் கசக்கும்
நாமே எடுத்திட்டால் இனிக்கும்
மிகவும் விசித்திரமானது தனிமை
அனுபவித்திடேல் வலிமை கிட்டிடும்

தனிமை கவிதை வரிகள்

உறவென்று நாம் நினைத்திட்டவர்கள்
விலகிப் போன பின்பு
யாருமில்லா வெறுமைகளை
இயலாமையாய் உணருவதே தனிமை

வாழ்க்கையில் ஒரு நாள்
தனிமையே பல பாடங்களை
கற்றுத் தருமனால்.. நான்
என் வாழ்நாள் முழுவதையும்
தனிமையிலே வாழ
விரும்புகின்றேன்.

தனிமை கவிதை வரிகள்
தனிமை கவிதை வரிகள்

தனிமை கவிதை வரிகள்

தனிமையில் எனக்கு
இனிமை இல்லை என்றாலும்..
அதில் துன்பங்கள் இல்லை
என்பதை உணர்த்த
மறுப்பதில்லை தனிமை..!

தனிமை மிகவும்
வித்தியாசமானது நாமே
அதை எடுத்துக் கொண்டால்
ரொம்ப இனிமையாக
இருக்கும்… தனிமையை
மற்றவர்கள் நமக்கு
கொடுத்தால் அது கசக்கும்.!

தனிமை கவிதை வரிகள்

தனிமை என்பது
யாருமில்லாமல் இருப்பது
அல்ல… நம்மை சுற்றி
எல்லோரும் இருந்தாலும்
நமக்காக யாருமில்லை என்று
உணருவதே.. தனிமை.!

தனிமை நம்மை நெருங்கிடாது
உறவுகளை சேர்த்து வைப்பது ஒரு வழி
கிடைக்கும் தனிமையை சுகந்திரமாய்
அனுபவிப்பதே சிறந்த வழி

தனிமை கவிதை வரிகள்

தடை செய்ய யாருமில்லாமல்
தடுத்து நிறுத்த தடைகள் இல்லாமல்
தனித்து நின்று சாதித்திடும் போது
தனிமைகள் என்றும் சுகந்திரமானவை

தேற்றுவதற்கு யாருமில்லாமல்
தனியாக அழுதிட்ட போதும்
தனிமையில் இன்னல்கள் இல்லை
இடையூறு செய்வோர் யாருமிலர் அங்கே

தனிமை கவிதை வரிகள்
தனிமை கவிதை வரிகள்

பல பாடங்களை கற்றுத் தந்து
நம்மை நாமே புரிந்து கொள்ள
நமது உற்ற நண்பனாய்
சிறந்த ஆசானாய் அமைவது தனிமை

பல உறவுகளால் தரமுடியாத
ஆறுதலையும் நிம்மதியையும்
சில நேரம் தனிமை தந்துவிடும்.

தனிமை கவிதை வரிகள்

Sad Alone Quotes In Tamil

உரிமையோடு சிலரை
உறவென்று நினைத்தது
தவறென்று புரிந்து கொண்டேன்..
மீண்டும் தனிமையே போதும்
என்று விலகிக் கொண்டேன்.

வாழ்க்கையில் நான்
நினைப்பதெல்லாம்
கிடைக்காமல் போகும்
போதெல்லாம் எனக்கு தானாக
வந்து ஆறுதல்
சொல்கின்றது தனிமை.

தனிமை கவிதை வரிகள்

ஆறுதல் இன்றி
தனிமையில் அழுது
முடித்த பின் வரும்
தன்னம்பிக்கை
மிகப் பெரியது..!

வாழ்க்கையில் தனிமையில்
இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்..
நம்முடன் இறுதி வரை
யாரும் வரப்போவதில்லை.

தனிமை நம்மை தாக்கிட்ட போதும்
தனியாக உணர்த்திட்ட போதும்
நமக்கு நாமே உறவாகி
நானிலத்தை வென்றிடுவோம்

நெடுந்தூர வாழ்க்கைப் போராட்டத்தில்
தன்னந்தனியாக போராடி
தனக்கென தனி இடம் அமைப்பவரே
என்றென்றும் வாழ்ந்திடுவர்

எவருக்கும்உன்னை பிடிக்கவில்லை என்றால்நீ இன்னும்நடிக்க கற்று கொள்ளவில்லை என்றே அர்த்தம்.

ஆறுதல் சொல்லயாரும் இல்லாமல் அழுது முடித்த பின்வரும் தன்னம்பிக்கை மிக பெரியது.

என்னதான் என்னை நானேசமாதான படுத்தி கொண்டாலும்சில ஏமாற்றங்கள்வலிக்க தான் செய்கிறது.

நான் தனிமையில்இருக்கும் போது எல்லாம்எனக்கு துணையாய்என் நினைவில் வந்துஒட்டி கொள்கிறாய்.