தமிழ் காதல் கவிதை – லவ் Quotes | Images

We have collected best quotes of தமிழ் காதல் கவிதைTamil love kavithai, Love Quotes In Tamil.

  •  சிறந்த காதல் கவிதைகள்
  • இனிமையான காதல் கவிதைகள்
  • காதலர் தினம் பாடல் வரிகள்

தமிழ் காதல் கவிதை

விழிகளை
திறந்தால்
நாணம்
தடைபோடுமென்று
விழிமூடி கொள்கிறேன்
உன் இதழோடு பேச

விரும்பியே
தொலைகின்றேன்
விலகிவிடாதே…

காதலின்
பிடியில்
சிக்கித் தவித்த
மலருக்கும்
ஆசை வந்தது
மரணிக்காமல்
வாழ……

காற்றோடு வந்த காதல் மொழியில்
நான் காத்தாடியானேன்…

விழிகள் அடிக்கடி
மோதிக்கொள்ள
இதயங்கள் ஒன்றானது…

நிசப்தமான இரவில்
உன் நினைவுமோர்
அழகிய கவிதை…

விழித்துக்கொண்ட நினைவுகள்
உறங்கும் போது விடியலும் வந்துவிடுகிறது…

பிடிவாதத்தில்
ஜெயிப்பதைவிட
உன் அன்பிடம்
தோற்பதையே
விரும்புகிறேன்.

முற்றுப்புள்ளி வைக்கும் போதெல்லாம்
அருகிலொரு புள்ளிவைத்து செல்கிறாய்….

மறையும் வரை
திரும்பிவிடாதே
என்னுயிர்
வந்துவிடும்
உன்னுடன்

உன்
விழிகளை நோக்கும் போது
கண்களுக்குள் என்னை
காண்பதைபோல்…..உன்
மனதிலும் நானேயிருப்பேன்
என்ற எண்ணமே
நம் வாழ்க்கையை
அழகாக்குகின்றது

மரக்கிளையில்
சாய்ந்தேன்
உன்
நினைவுகள்
துளிர்விட்டது

வரிகளில்லா
அழகிய கவிதை
உன் விழிகளில் ரசித்தேன்…

அங்கே உன்
நிலையென்ன….என்ற
நினைப்பிலேயே
என் நிமிடங்கள்
நகர்ந்துக்கொண்டிருக்கு

கடற்கரையில்
கால் பதித்தேன்
உன் நினைவுகளும்
ஒட்டிக்கொண்டது…

தனிமையில்
பயணங்கள்
களைத்ததில்லை
துணையாக
உன்
நிழல்
இருப்பதால்…

சிந்திக்க
பலயிருந்தாலும்
முந்திக்கொள்கின்றாய்..நீ

காவலன்
நீயானாய்
கைதி
நானானேன்

தள்ளாடிப்
போகின்றேன்…..
தென்றலில்
தள்ளாடும்
கூந்தலைப்போல்
உன்
கரம்
கன்னத்தில்பட

என் புடவைக்கெல்லாம்
வகுப்பு எடுப்பான்,
என்னை எப்படி
அழகுபடுத்த
வேண்டுமென..!!
என்னை ரசிக்கும்
ரசிகன் அவன்..!!

தினமும் சோர்வு வரும் போது,
என் தேநீர்
அவன் கையில்..!!
அவன் மனம்
என் மடியில்…!!!

சிலருக்கு மழைத்துளி பிடிக்கும்..
சிலருக்கு பனித்துளி பிடிக்கும்..
காதலித்து பாருங்கள்
கண்ணீர்துளியும் பிடிக்கும்..

நடுநடுங்கும் பனியில்
நனைந்த ரோஜாக்கள்
வெயிலுக்கு வெறுப்புச் சொல்லி
விரல்கள் பின்னிக்கொள்ள..,
அவன் கொடுத்த
திடுக்கிடும் முத்தம்.
திகட்டாமல் இனிக்க,
விளங்காத அதிசயத்தை
அவனிடம் தான் கேட்க வேண்டும்…!

கட்டிலறையோடு முடிவதல்ல காதல்
கல்லறைவரை தொடர்வதே காதல்

உன்முன்
உளறிக்கொட்டாமல்
சரளமாய் பேச…
கண்ணாடி
முன்னொரு
ஒத்திகை

மீண்டும் ஒரு பிரிவை தரும் எண்ணமிருந்தால் தொடராதே

யாழிசை
மீட்ட வந்தேன்……
உன்
இதழிசையில்
மூழ்கிப்போனேன்

நினைப்பதை கொஞ்சம் நிறுத்திவை விக்கலில் சிக்கி தவிக்கின்றேன்

என்னையும் மீறி
உன்னை திரும்பி
பார்க்க வைக்கிறது…..
என்னை
கண்டுக்கொள்ளாமல் போகும்
உன் பார்வை

தொலைக்காத போதும் தேடுகிறேன் உன்னை

நிலவின்றி இரவு தொடரலாம்
உன் நினைவின்றி
என் விடியல் தொடராது.

தீட்டிய
கத்தியைவிட
தீண்டும் உன்
பார்வை
கூர்மையாகவே
தாக்குகின்றது

கொட்டும் மழை
கொண்டுவந்து
சேர்த்தது…..
மறந்துப்போன
மழைக்கால
நிகழ்வுகளை

கண்ணீரும்
கனமானது
உன்னால்
வந்தபோது

இரவின் பிடியில் சிறைப்பட்டிருக்கும்
நிலவைப்போல் உன் நினைவின் பிடியில் நான்…

பாசம் காட்ட
பல உறவுகள்
இருந்தாலும்…..
மனம்
களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது
உன்னையே

தேய்பிறை நிலவுக்கு தான்
உன் நினைவுக்கு அல்ல…

உனக்காகவே என் வாழ்க்கை என்று
நீ சொன்னபோது தான்
என்னை எனக்கே பிடித்தது…

உனக்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு
நிமிடமும்
உணர்த்துகிறது
நீயில்லாத வாழ்க்கை
வெறுமை என்று…

உன்
தொடரலே
என்
உலகத்தை
அழகாக்குகின்றது

நீ
பொய்யாக
வர்ணிக்கும்
போதெல்லாம்…..
நாணம்
என்னை
மெய்யாகவே
அழகாக்குகின்றது

என்னைப்பற்றிய
கவலைகள்
எனக்கில்லை
அக்கறைக்கொள்ள
நீயிருப்பதால்……

நீயருகிலிருந்தால்
இருளிலும் நான்
பௌர்ணமியே…

கவிதை எழுத காதல் தேவையில்லை…..
பெண்களின் அழகை
ரசிக்க தெரிந்தாலே போதும்…….!!!!

வருடாவருடம் பூ புதிதாகலாம் But
வாங்கும் கொடுக்கும் கை
மாறக்கூடாது……..
( காதலர்தினம் )

உன்
அன்பெனும்
எண்ணெய்
வற்றாதவரை
நானுமோர்
சுடர்விட்டெரியும்
விளக்கே

உன்னை பிடித்துவிட்டதால்
இனி உனக்கு பிடிக்காதது
எனக்கும் பிடிக்காது…

இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்

சின்னச்சின்ன
ஊடல்கள்
உன்னை
பிரிவதற்கல்ல
நம் காதலை
வளர்ப்பதற்கு

நீ
உடனில்லாத போது
உன் நினைவுகளுடன்
பயணிக்கின்றேன்

விடுவிக்க
முயன்றும்
தோற்றுப்
போகிறேன்….உன்
பார்வை
பிடியிலிருந்து

உன் நினைவுகளோடு பேசிப்பேசி
ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்

சோகங்கள்
இதயத்தை
துளைக்கும்
போதெல்லாம்
புல்லாங்குழலும்
கண்ணீர்
வடிக்கின்றது

இவள் மறைய அவன் வர அவன்மறைய
இவள் வரவென்று வானிலும் ஓர்
கண்ணாமூச்சி

வார்த்தை போதாத நேரங்களில்
முத்தங்களும்..!!
முத்தங்கள் தீரும் நேரங்களில்
அணைப்புகளும்..!!
எல்லாம் தீர்ந்த பிறகும் உன்
ஒரு பார்வை போதும்..!!
இந்த பெருங்காதல் வாழ.

கணவன் மனைவி இடையில்
தீராக் காதலை போல
மாறாத நட்பும் இருந்தால்
இல்லறம் என்றும் இனிக்கும்..!!

நேற்று வரை எதையோ தேடினேன்
இன்று என்னையே தேடுகின்றேன் உனக்காக

எனக்கு
இன்னொரு தாய்மடி நீயடா…

மறக்க தவிக்கும் நீயும்
மறக்க முடியாமல் நானும்

நீ வெறுக்கும் ஒவ்வொரு முறையும்
இதயம் சிதறிதான் போகிறது

சந்தோஷமாய் பறக்கின்றேன்
சிறகுகளாய் நீ இருப்பதால்

மார்கழி குளிரும்
இதமான வெப்பமானது
உன் நினைவுபுள்ளியில்
கோலத்தை ஆரம்பித்தபோது

இதயம் என்ன போர்க்களமா…
உன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே…

என்னவனுக்குள்
தொலைந்த நொடியிலிருந்து
தினமும் எனக்கு காதலர் தினமே

காதல் சிலருக்கு
கண்ணீரின் காவியம்
பலருக்கு அழகிய ஓவியம்

கடலில்
விழுந்த
நீர்துளிப்போல்
உன்னில்
கலந்துவிட்டேன்

உன் நெஞ்சத்தின்
பஞ்சணையில்…
என் கவலைகளும்
உறங்கிவிடும்

என்ன மாயம் செய்தாய்
உனக்கெழுதும் வரிகளெல்லாம்
மாயமாக மறைகிறதே

நீயில்லா நேரம்
நினைவுகள் பாரம்

ஆயுளின் காலம்
எதுவரையென்று
தெரியாது ….
ஆனால் உனதன்பிருக்கும்வரை
என் ஆயுளிருக்கும்…

விழி பார்த்து
பேசு என்கிறாய்
உன் விழி நோக்க
மொழிகளும்
மறந்து போகிறது…

சிறுசிறு சண்டைகள்
காதலின் அம்சம்
பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும்

பிரிந்திருந்த
நாட்களில் தான்
நம் காதல்……
விருட்சமாக
வளர்ந்திருக்கின்றது
என உணர்ந்தோம்
நாம் சேர்ந்தபோது

உன்னருகில்
மௌனமும்
ஓர் அழகிய கவிதை தான்…

உன்
விரலிட்ட
பொட்டு
வட்ட
நிலவாக
நானுமோர்
பௌர்ணமியானேன்…

எழுதவில்லை
செதுக்குகிறேன்
உனக்கான கவிதையை
என் இதயத்தில்

மரணத்தை கொடுத்துவிடு
ஒரு நொடி வலி
மௌனத்தை கொடுக்காதே
ஒவ்வொரு நொடியும் மரண வலி

தோளில்
சுமைகளை
சுமந்த
தோழன்
மார்பில்
சாயும்
வரம்
கொடுத்தான்
கணவனாகி

tamil love kavithai
இந்த நொடி
இப்படியே
நீண்டிட
வேண்டும்

ஆசை
ஊற்றெடுக்கும்
போதெல்லாம்
அணைபோடுகிறது
நாணம்…….

தழுவிச் செல்லும்
காற்றிலும் உன்
நினைவுகளே
கூந்தலை
கலைத்துச் செல்கையில்…

புரிந்துக்கொள்ளும் வரை
எதையும் ரசிக்கவில்லை
புரிந்துக்கொண்டபின்
உன்னை தவிர எதையும்
ரசிக்கமுடியவில்லை…

அகிம்சையாக உள்ளே நுழையும்
சில நினைவுகள்
வெளியேறும் போது
போர்க்களமாக்கிவிட்டு
செல்கிறது மனதை…

ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்துச்செல்கிறாய்
என் விழிகள் தான்
ஏனோ உன் வழியை தொடர்கிறது…

மனதிலுள்ள
ஆசையெல்லாம்
நீ பார்க்கும் போது
நாணத்தில்
மறைந்துக்கொ(ல்) ள்கிறது
விழிகளை மூடிக்கொள்
என்னாசைகளை நிறைவேற்ற

அன்பெனும்
மாளிகையில்
அழியாத
பொக்கிஷம்
நம் அழகிய
நிகழ்வுகள்

வாடிய மனம் வானவில்லானது
உன் வருகையை கேட்டு…

மொழியில்
சொல்லத்தயங்கும்
ஆசைகளையெல்லாம்
விழியில்
கொட்டித்தீர்க்குறேன்…

என்னைவிட நம் காதலை பாதுகாத்தது
நீ நான் தவறவிட்டபோதெல்லாம்
தாங்கி பிடித்தாய்…

இரவும்
கடந்துக்கொண்டிருக்க…
உன் நினைவுகள்
உரசிக்கொண்டிருக்க….
என் உறக்கமும்
தொலைந்துக்கொண்டிருக்கு

என்னை தேடியபோதுதான்
உணர்ந்தேன் உன்னில் தொலைந்திருப்பதை.

நீ மௌனமாகும் போது என் கண்ணீர் பேசுகிறது

வெகு நாட்களுக்கு பிறகு
எனக்காக உறங்க போகிறேன் வந்துவிடாதே கனவில்.

நொடியேனும்
மறக்க முடியாமல்
உன்னையே
நினைக்க வைக்கும்
உன் நினைவுமோர்
எட்டாவது அதிசயமே.

நீ போகுமிடமெல்லாம் என் மனதையும் எடுத்துச்செல்
உன்னை தேடியே என்னை கொல்கிறது.

பூவுக்குள்ளும்
பூத்திருக்கின்றது
உன்
காதல்
வாசனை

வேள்வியின்றி
எரிகின்றேன்
உன் விழித்
தீயில்

நம்
வாழ்க்கையை
வண்ணமாக்க….
உன்
கையை
தூரிகையாக்கினாய்

ஒற்றை
விழியில்
நோக்கினாலும்
எங்கும் நீயே
என்
இருவிழிகளாய்

நீ
தாமதிக்கும்
ஒவ்வொரு
நொடியும்
கடிகாரமுள்ளைவிட
அதிவேகமாகவே
துடிக்கின்றது
என்
இதயம்

நடுநடுங்கும் குளிரில்
அணைத்துக்கொண்டே
உளறாமல் பேசு என்றான்

தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன்

கரைசேர
துடுப்பிருந்தும்
கரையேறும்
எண்ணமில்லை
நிலவொளியில்…உன்
நினைவுகள்
நிறைந்திருப்பதால்

நீ மௌனமாகும் போதெல்லாம்
என் கவிதைகளும்
கண்ணீர் வடிக்கின்றது…

விழிகளுக்குள்
நீயிருக்கும் வரை
என் கனவுகளும் தொடரும்…

படிக்காமலேயே
மனப் பாடமாகிப்போனது
உன் நினைவுகள்

சிறை
வாழ்க்கையும்
பிடிக்கும்
அது உன்
இதயமென்றால்

கவிதை வரியின் சுவை
அர்த்தம் புரியும் வரையிலாம்…..
உன் விழிக்கவிதையின்
அர்த்தம் புரிந்தபின்னே
நான் சுவைக்கவே
ஆரம்பித்தேன்

ஒரு நொடி வந்து போனாலும்
மனதை ரணமாக்கியே
செல்கிறது சில நினைவுகள்…

என்னருகில்
நீயிருந்தால்
தினமும்
பௌர்ணமியே

நினைவென்றாலே…
அது நீயானாய்…

கெஞ்சலும்
கொஞ்சலும்
காதலில்
அழகு

சுண்டுவிரல் பிடித்து
ஒரு ஒத்தையடி பாதையில்
நடை பழகச் சொல்லிக்கொடு
உன்னால் தான்
நான் என் பெண்மையை
அடையபோகிறேன்….!

நெற்றியில்,
என் விதியை
எழுதிய ஆண்டவன்
தன்னை மறந்து
தவறாய் எழுதிய
அழகிய பிழைதான்
நமது ஆழமான காதல்…!

நிலைக் கண்ணாடி
என் முகத்தை காட்டினாலும்
மனக் கண்ணாடியில்
உன் முகத்தையே
ரசிக்கின்றேன்

கண்களுக்குள் என்னவர்
கனவே கலையாதே

தொலை(ந்த)த்தஒன்று
உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல்…

என்னவரின்
அன்பில்
எல்லையற்ற
மகிழ்ச்சியில்
நான்…….

என் வானம் நீ
தேய்ந்தாலும் மறைந்தாலும்
மீண்டும் வலம்வரும்
நிலவாய் நான்…

காதல் தூறல் போட
சட்டென
வானவில்லாய்
ஆனது மனம்…

மனக்கடலில்
நீ குதிக்க
மூழ்கிப்போனேன் நான்

சூடாக நீ தந்த ஒரு கப் காப்பி
இதமாகவே இருந்தது
உன் அன்பில்

உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை

பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்…
இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்

குளிர் காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ

சுத்தமாய் என்னை மறந்து போனேன்
மொத்தமாய் நீ அள்ளும் போது

உன்னுள் உறைந்து
உலகம் மறக்க
ஆசையடா

உன் மார்போது
நீ என்னை
அனைக்கும் போது
நான் உணர்ந்தது
காம உணர்வை அல்ல..!!
அளவுகடந்த உந்தன்
காதலையும்..!! பாதுகாப்பையும்..!!

மாமா அத்தான்
என்றெல்லாம் ஆயிரம் முறை
அழைக்கிறேன் உன்னை…!!
ஏனோ உன் பெயரைச்சொல்லி
அழைக்கச் சொன்னால் மட்டும்
ஒரு வெட்கம் வந்து ஒட்டிக்கொள்கிறது…!!

கற்பனையும் ரசனையும்
கலந்து காற்றோடு
கைவீசி கதைசொல்கிறாள்..!!
பட்டாம்பூச்சி என சிறகடிக்கும்
அவள் கண்களோடு
நானும் பறக்கிறேன்…!!

எழுத்துப்பிழைகள் அடங்கிய
என் அழகிய
கவிதை நீ…..!!

தொலைவேன் என்று
தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை

வார்த்தைகள்
ஊமையாக
உன்வசமானேன்

உன் தொலைதூர
பயணத்தில் என்னையும்
சுகமாகவே சுமந்துச்சென்றிருகிறாய்
என்று விடாமல் ஒலிக்கும்
உன் தொலைதூர குரல்
சொல்லாமல் சொல்கிறது…

விடிந்தபின்னும் உறங்கிகிடக்குறேன்
விழிமூடாமல் உன் நினைவில்…

எனையறியாமல்
உறங்கிப்போனேன்
உனதன்பில்…

தனிமையின்
இடைவெளியை
நிரப்புகின்றது
உன் …..
நினைவுகள்…

அடிக்கடி நினைக்க வைத்து
கன்னத்தை நனைத்துச்
செல்கிறாய்…

மனதுக்குள்
ரசித்தாலும்
மயங்கிப்போகிறேன்
விழிகளுக்குள்
உன்….
பிம்பம்
வந்துநிற்க

ரசிக்க
காத்திருந்தபோது…நீ
இசைக்கவில்லை….
இன்று இசைக்க
காத்திருக்கின்றாய்
ரசிக்கும்
மனநிலையில்
நானில்லை

நீ பொழியும்
அன்பின்
அருவியைவிடவா
இந்த
மலையருவி என்னை
மகிழ்விக்கபோகிறது…

தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய்
வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது…

உன்
நினைவுத்…
தென்றலில்
நானுமோர்
ஊஞ்சலாகின்றேன்

ஆசைகள் கடலாய்
பொங்க……
வெட்கங்கள் அலையில்
அடித்துச்செல்ல……
அச்சங்கள் கரையொதுங்க
முத்தங்களும் தொடர்ந்தது…..

புயலைவிட
வேகமாக
தாக்குகிறது
உன் பார்வை…..
கொஞ்சம்
தாழ்த்திக்கொள்
நான்
நிலையாக
நிற்க….

தொல்லைகள்
செய்யாமல்
தொலைவாகவே
தொடர்ந்து
என்னை
உன்னில்
தொலைக்க
செய்தாய்.

எனக்காக நீ விட்ட
ஒரு சொட்டு
கண்ணீர்….
உனக்காகவே
வாழவேண்டுமென்று
இதயத்தில்…
உறைந்துவிட்டது

நாணத்திற்கு
விடுதலை
கொடுத்தேன்
வளையல்களும்
தலைக் கவிழ்ந்தது

சிறு ஊடல்
ஒரு காத்திருப்பில்
வளர்கிறது காதல்

மனதை
மயக்குகின்றாய்
மருதாணி
வாசனையாய்…..

என்னை
மௌனமாக்கி
நீ
விழியில்
பேசியே
வென்றுவிடுகிறாய்

கவிதைக்கு
வரிகள் கேட்டேன்……..
உன்னிதழின்
வரிகளைவிட
அழகிய
வரிகளில்லை
என்றான்

மனமின்றி
விடைகொடுத்தாய்
மரணித்தே
விடைபெற்றேன்

புகையும்
உன்
நினைவில்
புதைந்து
கொண்டிருக்கின்றேன்

உணர்வற்ற கவிதைக்கும்
உயிர் வருகிறது
நீ ரசிக்கும் போது

பூ
தலைசாய்ந்தால்
தாங்கிக்கொள்ளும்
கிளையைபோல்
நான்
தலைசாய
நீ வேண்டும்
தாங்கிக்கொள்ள

சொல்லாமல் கொள்ளாமல் தழுவிச்செல்லும்
தென்றலைப்போல்
மனதை வருடிச்செல்கிறது
உன் நினைவுகள்

தனிமையை
இனிமையாக்க
உன்
நினைவுகளால்
மட்டுமே முடியும்…

மேகங்கள் சூழ்ந்த
நிலவாய் நான்
காற்றாகி ஒளித்தந்தாய் நீ

என்னை அழவைத்து அழகு பார்ப்பதும் நீ தான்…
அருகில் வைத்து அரவணைப்பதும் நீயே தான்…..

நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை…
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை..!!

தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை…
உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது…

மின்னலாய்
நீ வர
மழைச்சாரல்
மனதுக்குள்

உன்
மொழியில்லா
ஆறுதலில்
எனை
மறந்துப்போனேன்

முழுதாய்
மறைவதற்குள்
நிலவு விழித்துக்கொள்வதென்ன
உன் நினைவு

நீ
ரசிக்க
நானும் ஒரு
சிலையானேன்

முடியாத பயணம்
நான் தொடர வேண்டும்
உன் கரம் பிடித்து…

வெறுமையான
வாழ்க்கையும்
வசந்தகாலமானது
உன்னால்….

கடவுளை
அழைத்தேன்
காட்சித் தரவில்லை
என்னவரை
நினைத்தேன்
கண்ணெதிரே
தோன்றினார்

மொத்தமாய்
உன்
அன்பு
என்னை
ஆதிக்கம் செய்ய
சுத்தமாய்
மாறிப்போனேன்
நானும்

என் பிழைகளை
திருத்தும்
பிழையில்லா
கவிதை … நீ

இதயக்கதவை
உன் நினைவுகள்
தட்ட……..
எட்டிப்பார்கின்றது
விழிகளும்
நீ வரும்
வழியை நோக்கி…….

எரிக்கும் உன்
பார்வைத்தீயில்
உருகும்
மெழுகாய் நான்….

காற்றிலே ஆடும்
காகிதம் நான்
நீதான் என்னை
கடிதம் ஆக்கினாய்..!!

நாம் இருவர்
காதலின் ஆழம்பற்றி..!!
இணையும் விரல்கள்
நிறைய பேசட்டும்…!

ஆயிரம் இன்னல்கள் வந்தாலும்
மீண்டும் ஒரு ஜென்மத்தில்
உன்னை நான்
காதல் செய்திடுவேன்…!

கண்களில் கைதாக்கி
இதயத்தில் சிறைவைத்து
உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய்

உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு
இல்லையேல் என்னுள் நீயும் தொலைந்துவிடு

காத்திருந்து
களைத்துவிட்டது
கண்கள்
கனவிலாவது
கலந்துக்கொள்

தனிமையை
நேசிக்கின்றேன்
உன் நினைவுகளுக்காக…

நீ வெட்கித்தலை குனிந்து
கொலுசுமாட்டும் அழகில்
நான் சொக்கித்தான்
போகின்றேன்…

உன் பார்வையென்ன
மருதாணியா பட்டதும் சிவக்கின்றதே முகம்

வாடிய காதலுக்காக
தினமும் புதிதாய்
பூக்கின்றது கவிதை

நீங்காத இரவொன்று
வேண்டும்….அதில்
நிலையான கனவாக
நீ நிலைக்க வேண்டும்

தாயின்
நினைவில்
தவித்துப்போனான்
நானுமோர்
தாயாகிப்போனேன்

உன் நினைவுகள்
விழித்துக்கொள்ள
உறக்கமும்
கலைந்தது

பார்வையில் மனதை
பறித்துச்சென்றாய் நான் சிறகிழந்த பறவையானேன்…

சுழற்றியடிக்கும்
காற்றையும் எதிர்த்து
சுடர்விட்டெரிகிறது
அகல்விளக்கு….
பல ஆசைகளுடன்
என்னைப்போலவே
உன்னை வரவேற்க

அன்பு காட்டுவதில்
ஜெயிப்பது நீயென்றால்
உன்னிடம் தோற்பதும்
எனக்கு வெற்றியே…

இளகாத
உன் மனதால்
மெழுகாக
நானுருகி
வரிகள் பல
வடிக்கின்றேன்
கற்பனையில்
காதல் செய்து

உன் தேடல் நானென்றால்
தொலைவதும்
ஒரு சுகமே

மயக்கும்
மல்லிகையை
கையில்கொடுத்து
மனதில்…..
அணையா
ஆசையை
மூட்டிச்சென்றான்

உன்னை மட்டும் காதலிக்க
தெரிந்த எனக்கு” !
உன்னை எவ்வாறு
காதலிக்க வேண்டும்
எனத் தெரியவில்லை..!!
உளறுகிறேனட…
கதிரவன் மறையும் பொழுதில்
கண் உறங்கும் வேளையில்
கனவில் கள்வா
உன் காட்சித் தருகையால்..!!

ஜாதியை ஒழிக்க,
வீட்டிற்கு ஒரு
காதல் வளர்ப்போம்….!!!

நான்- அவன் மட்டும் இருக்கும்
ஒரு சின்ன அறையில்
மின்சார தேவையில்லை
அவன் கண்களும்!
காதலும்! போதும்
நாங்கள் வாழ்ந்து மறைய…!!!

கண்ணீரை சுமக்கின்ற
கண்களுக்கு தான் தெரியும்
உன்னை கண்ணாமல் இருப்பது
எவ்வளவு வலி என்று..!!

போகும்பாதை
எதுவானாலும்
வாழும் காலம் முழுதும்
உன்னோடுதான்…!!

காதல் மழையில்
குடை நனைய….
குடைக்குள் காதலில்
நாம் நனைகிறோம்…..

ஏட்டில்
படித்த
எதுவும்…
மன
ஏட்டில்
பதியவில்லை…
உன்
நினைவுகளை
தவிர

Leave a Comment