தமிழ் பழமொழிகள் | Proverbs In Tamil – Images

தமிழ் பழமொழிகள்: Tamil Proverbs, List Of Tamil Proverbs In Tamil, பொதுவான தமிழ் பழமொழிகள் , ஊக்கவிக்கும் தமிழ் பழமொழிகள் , Motivating Tamil Proverbs, சுவாரசியமான அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் , நண்பர்களுடன் பகிர தமிழ் பழமொழிகள், Tamil Proverbs For Friends, வாட்ஸ் ஆப்பில் பகிர தமிழ் பழமொழிகள் , குறுஞ்செய்தி அனுப்ப தமிழ் பழமொழிகள் , பகிர மேலும் சில பழமொழிகள் , முகநூளில் தினமும் பகிர பழமொழிகள்.

தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்

தமிழ் பழமொழிகள்

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!

முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலிகொண்டு வெட்ட வேண்டும் .

தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்

கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்

கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.

காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.

மத்தளத்திற்கு இரு புறமும் இடி.

தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்

பொதுவான தமிழ் பழமொழிகள் | Common Tamil Proverbs

சொல்வல்லவனை வெல்லல் அரிது.

எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!

தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்

நுணலும் தன் வாயால் கெடும்.

கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

Proverbs In Tamil
Proverbs In Tamil

உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?

கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.

மறைந்துள்ள அறிவுக்கும் அறியாமைக்கு வேற்றுமை இல்லை.

Proverbs In Tamil
Proverbs In Tamil

சுவாரசியமான அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் | Interesting Tamil Proverbs

அறிவு ஒரு சுமை அன்று.

அறிவு தன் விலை அறியும்.

அறிவே நன் மனிதனை தொடங்கி வைக்கிறது.. ஆனால் அதுவே அவனை முழுமை அடைவிக்கிறது.

Proverbs In Tamil
Proverbs In Tamil

ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவே விஞ்ஞானம்.

அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.

கலையும் அறிவும் தரும் உணவும் மதிப்பும்.

அறிவு பழமொழிகள்
அறிவு பழமொழிகள்

அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.

அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.

அறிவு பழமொழிகள்

ஊக்கவிக்கும் தமிழ் பழமொழிகள் | Motivating Tamil Proverbs

அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

ஐயமே அறிவின் திறவுகோல்.

Proverbs In Tamil
Proverbs In Tamil

அறிவு பழமொழிகள் – Proverbs In Tamil

அறிவே ஆற்றல்.

அறிவு வருகிறது ஆனால் ஞானம் நீடித்து நிற்கிறது.

அனுபவமில்லாத அறிவு அரை கலைஞனை உருவாக்கும்.

Proverbs In Tamil
Proverbs In Tamil

அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.

நம்மை அறிவதே நமக்கு அறிவாகும்.

அறிவைப் பெருக்குபவன் துயரத்தை பெருக்குவான்.

Proverbs In Tamil
Proverbs In Tamil

ஐயமே அறிவின் திறவுகோல்.

நம்மை அறிவதே நமக்கு அறிவாகும்.

அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

Proverbs In Tamil

நண்பர்களுடன் பகிர தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs For Friends

அறிவு தன் விலை அறியும்.

அறிய அறியக் கெடுவார் உண்டா?

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

Proverbs In Tamil
Proverbs In Tamil

அரைக் கல்வி முழு மொட்டை.

அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.

Proverbs In Tamil
Proverbs In Tamil

கல்லாதவரே கண்ணில்லாதவர்

தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.

கற்பதற்கு வயது இல்லை.

தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்

கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு.

தீய பண்பைத் திருத்திடும் கல்வி.. நல்ல பண்பை பொலிவுறச் செய்யும்.

கற்காதவன் அறியாதவன்.

தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்

குறுஞ்செய்தி அனுப்ப தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs For SMS

கல்வியால் பரவும் நாகரிகம்.

கல் மனம் போல் பொல்லாப்பில்லை.. கற்ற மனம் போல் நற்பேறில்லை.

கல்வியே நாட்டின் முதன் அரண்.

தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்

சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி

கற்கையில் கல்வி கசப்பு: கற்றபின் அதுவே இனிப்பு.

கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்

கல்வி உள்ள வாலிபன் கன கிழவனே

கல்வி ஒன்றே அழியாச் செல்வம்

அறிவுடையாரை அரசனும் விரும்புவான்

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

அத்து மீறிப்போனான், பித்துக்கொள்ளி ஆனான்

அத்தைக்கு மீசை முளைத்தாற் சிற்றப்பா என்கலாம்

அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகமா?

அத்தம் மிகுதியினால் அல்லவோ அம்பட்டன் பெண் கேட்கிறான்

அத்தனையும் நேர்ந்தாள், உ;ப்பிட மறந்தாள்

அத்தான் செத்தான் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு

அத்திக்காயைப் பிட்டுப்பார்த்தால், அங்கும் இங்கும் பொள்ளல்

அத்தி பூத்ததுபோல் இருக்கிறது அவன் வந்தது

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால், அத்தனையும் புழுத்தான்

அத்திப்பூவை ஆர் அறிவாhக்ள்?

அத்திப்பூவைக் கண்டவர்கள் உண்டா? ஆந்தைக் குஞ்சைப்பார்த்தவர்கள் உண்டா?

அத்திமரத்தில் தொத்திய கனிபோல

அத்து மீறிப்போனான், பித்துக்கொள்ளி ஆனான்

அத்தைக்கு மீசை முளைத்தாற் சிற்றப்பா என்கலாம்

அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகமா?

அண்டத்திற்கு உள்ளது பிண்டத்திற்கும் உண்டு

அண்டத்தில் இல்லாததும் பிண்டத்தில் உண்டா?

அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?

அண்டமும் பிண்டமும் அந்தரங்கும் வெளியரங்கமும்


அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்?

அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி

அண்டை வீடடுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்

அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்

அண்ணனார் அரண்மனையில் அள்ளி உண்ணப் போகிறாள்

அண்ணனிடத்தில் ஆறு மாதம் வாழ்ந்தாலும், அண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?

அண்ணனுக்குப் பெண் பிறந்தால், அத்தை அசல் நாட்டாள்

அண்ணனும் தம்பியும் சென்மப் பகைவர்

அண்ணனைக் கொன்ற பழி, சந்தையிலே தீhத்துக்கொள்ளுகிறது போல

அண்ணன் பெரியவன, அப்பா நெருப்பு ஊது

அண்ணன் கொம்பு பம்பழ பளாச்சு

அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்

அண்ணன் தம்பி வேண்டும் இன்னம் தம்பிரானே

அண்ணாவியார் விழுந்தால் அடைவுமுறை

அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?

அஞ்சினவனைப் பேய் அடிக்கும்

அஞ்சி ஆண்மை செய்

அஞ்சினரைக் கெஞ்சுவிக்கும், அடித்தாரை வாழ்விக்கும்

அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய்

அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கபப் பாயவும் வேண்டும்

அஞ்சு குஞ்சும் கறியாமோ? அறியாப் பெண்ணும் பெண்டாமோ?

அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை

அஞ்சு பணம் கொடுத்தாலும், இத்தனை ஆத்திரம் ஆகாது

அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப் பெண்ணும் கறி சமைக்கும்

அஞ்சுருத்தாலி நெஞ்சுரவக் கட்டிக்கொண்டு வந்தாற்போல் வலக்காரமாய்ப் பேசுகிறாய்

அஞ்சு வயது ஆண்பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்கவேண்டும்

அஞ்சுவொரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்

அஞ்சூர்ச்சண்டை சுண்டாங்கி, ஐங்கல அரிசி ஒரு கவம்

அஞ்செழுத்தும் பாவனையும் அவனைப்போல் இருக்கிறது

அடக்கத்துப் பெண்ணுக்கு அழகேன்?

அடக்கமுடையார் அறிஞர், அடங்காதார் கல்லார்

அடக்கமே பெண்ணுக்கு அழகு

அடக்குவாரற்ற கழுக்காணியும் கொட்டுவாரற்ற மேளமுமாய்த் திரிகிறான்

அடங்காத பாம்பிற்கு ராஜா மூங்கில்தடி

அடங்காத பெண்சாதியினலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு

அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும்

அடங்கின பிடி பிடிக்கவேண்டும், அடங்காத பிடி பிடிக்கலாகாது

அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு

அடா என்பான், வெளியே புறப்படான்

அகிர்த்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?

அகோர தபசி விபரீத சோரன்

அகோர தபசி, விபரீத நிபுணன்

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை

அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை

அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால், அப்பா முழச்சிற்றாடை என்கிறதாம் பெண்

அக்காள் இருக்கிறவரையில் மச்சான் உறவு

அக்காள் உண்டானால், மச்சான் உண்டு

அக்காள் உடைமை அரிசி, தங்கைச்சி உடைமை தவிடா?

அக்காள் உறவும் மச்சான் பகையுமா?

அக்காளைக் கொண்டால், தங்கையை முறை கேட்பானேன்?

அககாளைப் பழித்துத் தங்கை அபசாரியானாள்

அக்காள்தான் கூடப்பிறந்தாள், மச்சானும் கூடப்பறிந்தானா?

அக்கிராரத்தில் பிறந்தாலும், நாய் வேதம் அறியுமா?

அக்கிராரத்துக்கு ஒரு ஆடு வந்தால், ஆளுக்கு ஒரு மயிர்

அக்கினி மலைபோல் கர்ப்பூரபாணம் பிரயோகித்ததுபோல

அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான்

அக்கினியாற் சுட்ட புண் விஷமிக்காது

அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன?

அங்கத்தை ஆற்றில் அலைசொன்னதா?

அங்கத்தை கொண்டுபொய் ஆற்றில் அலசினாலும், தோஷம் இல்லை

அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்கவொண்ணாது

அங்காங்கு வைபோகமாயிருக்கறான், இங்கே பார்த்தால் அரைக்காசு முதலும் இல்லை

அங்காடி விலையை அதிர அடிக்காதே

அடுத்தவனைக் கெடுக்கலாமா?

அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான்

அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறேன்

அடுத்து அடுத்துத் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்

அடுத்துக் கெடுப்பான் கபடன், தொடுத்துக் கெடுப்பாள் வேசி

அடுத்து வந்தவருக்கு ஆதரவு சொல்லுவோன் குரு

அடுப்பருகில் வெண்ணெயை வைத்த கதை

அடுப்புக் கட்டிக்கு அழகு வேண்டுமா?

அடுப்பு நெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சுது

அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்

அடைந்தோரை ஆதரி

அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும்

அடைமழைக்குள்ளே ஓர் ஆட்டுக்குட்டி செத்ததுபோல

அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை

அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல

அட்டமத்துச்; சனி நட்டம் வரச் செய்யும்

அட்டமத்துச் சனி பிடித்தது, அரைச் துணியும் உரிந்து கொண்டது

அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல

அட்டைக்கும் திருத்தியில்லை, அக்கினிக்கும் திருத்தியில்லை

அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்ததுபோல

அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையையே நாடும்

அணில் ஏறிவிட்ட நாய் பார்ப்பதுபோல

அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ?

அணு மகாமேருவாமா?

அதிஷ்டம் தொட்ட கழுக்காணி

அதிஷ்டம் ஆறாய் பெருகுகிறது

அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்

அதிஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்கும்

அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்

அதிர அடித்தால், உதிர விளையும்

அதிலும் இது புதமை, இதிலும் அது புதமை

அதிலே குறைச்சல் இல்லை ஆட்டடா பூசாரி

அது அதற்கு ஒரு கவலை, ஐயாவுக்கு எட்டுக் கவலை

அது எல்லாம் உ;ணடிட்டு வா என்பான்

அதுவும் போதாதென்று அழலாமா இனி?

அதைரியமுள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல

அதைவிட்டாலும் கதியில்லை, அப்புறம் போனாலும் வழியில்லை

அகதிக்குத் தெய்வமே துணை

அகதி சொல் அம்பலம் ஏறாது

அகதி தலையிற் பொழுது விடிகிறது

அகதி பெறுவது பெண்பிள்ளைஈ அதுவும் வெள்ளி பூராடம்

அகதியைப் பகுதி கேட்கிறதா?

அகத்தில் அழகு முகத்தில் தெரியும்

அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே

அகப்பட்டுக்கொள்வேன் என்றே கள்ளன் களவெடுக்கிறது?

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து ராஜா

அகப்பை பிடித்தவன் தன்னவனானால், அடிப்பந்தியில் இருந்தாலென்ன, கடைப்பந்தியில் இருந்தாலென்ன?

அகம் ஏறச் சுகம் ஏறும்

அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்

அகம் மலிந்தால் எல்லாம் மலியும், அகம் குறைந்தால் எல்லாம் குறையும்

அகல இருந்தால் நீள உறவு, கிட்ட இருந்தால் முட்டப் பகை

அகல இருந்தால் பகையும் உறவாம்

அகல இருந்தால் புகல உறவு

அடாது செய்தவர் படாது படுவார்

அடி அதிரசம் குத்துக் கொழுக்கட்டை

அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவுவார்களா?

அடிக்க அடிக்கப் பந்து விசைகொள்ளும்


அடிக்;கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படவேண்டும்

அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயப்படுமா?

அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும்

அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை

அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா?

அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி

அடித்துப் பழுத்ததும் பழமா?

அடித்துப் பால் புகட்டுகிறதா?

அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் செவ்வையாகா

அடித்துவிட்டவன் பின்னே போனாலும், பிடித்துவிட்டவன் பின்னே போகலாகாது

அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமுமா?

அடி நொச்சி நுனி ஆமணக்கா?

அடிப்பானேன் பிடிப்பானேன்? அடக்குகிற வழியில் அடக்குவோம்

அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்

அணுவும் மலையாச்சு, மலையும் அணுவாச்சு

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா?

அணை கடந்த வெள்ளத்தை மறிப்பவர் ஆர்?


அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா, அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா?

அண்ணனுக்கும் தொண்டையும் அதிர அடைத்தது

அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னர்சாமி மயிரைப் பிடுங்குமா?

அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை

அதிக ஆசை அதிக கஷடம்

அதிக ஆசை அஷ்டதரித்திரம்

அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால், விடியமட்டும் திருடலாம்

அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்துதபோல

அதிகாரி வீPட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்

அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா?

அகடவிகடமாய்ப் பேசுகிறேன்

அகதிக்கு ஆகாயம் துணைஅகல்வட்டம் பகல் மழை

அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்

அகழிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்

அகா நாக்காய்ப பேசுகிறான்


அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச்சொன்னால், வெங்காயம் கருவேப்பிலை என்பாள்

அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு

அங்;கு தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக்கொண்டான் தும்மட்டிப்பட்டன்

அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்கும் பங்கும் இருப்பான்

அங்கேண்டி மகளே கஞ்சக்கு அழுகிறாய்? இங்கே வந்தால், காற்றாய் பறக்கலாம்

அசல் வாழ்ந்தால், ஐந்து நாள் பட்டினி கிடப்பாள்

அசல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறதா?

அசலும் பிசலும் அறியாமல் அடுத்தவனைக் கெடுக்கப் பார்க்கிறான்

அசவாப் பயிரும் க்ணடதே உறவும்

அடிமை படைத்தால் ஆள்வது கடன்


அடியற்ற பனைபோல் விழுந்தான்

அடியற்ற மரம்போலே

அடியற்றல் நுனி விழாமலிருக்குமா?

அடியா நாடு படியாது

அடியாத மாடு படியாது

அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு

அடியும் பட்டுப புளித்த மாங்காயா தின்னவேண்டும்?

அடியென்று அழைக்கப் பெண்டீர் இல்லை, ஆண் எத்தனை பெண் எத்தனை என்கிறது போல

அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும்

அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற்போல

அடுக்கிற அருமை தெரியுமா உடைக்கிற நாய்ககு?

அடுத்த கூரை வேவுங்கால் தன் கூரைக்கு மோசம்
அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடு

அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்

அச்;சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

அச்சிக்குப் போனாலும், அகப்பை அரைக்காசு

அச்சியிலும் பிச்சைக்காரர் உண்டு

அஞ்சனக்காரன் முதகில் வஞ்சனைக்காரன் ஏறினான்

அஞ்சலிவந்தனம் ஆரக்கும் நன்மை

அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்?

அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அஞ்சினவனைக் குஞ்சும் வெருட்டும்

உன்னைவெறுப்பவர்களை நினைத்துக் கவலை கொள்ளாதே அவர்களுக்கு உன் அன்பை பெற தகுதி இல்லை என நினைத்துக்கொள்!

ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் பிறகு என்ன நடந்தாலும்க கவலையென்பது இல்லை!

கொடுப்பவன் இறைவன் என்பதை உணர்ந்து கொண்டால் கிடைப்பது எதுவும் தாழ்வாகத் தெரியாது!

Leave a Comment