வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்: Valkai Thathuvam Kavithaigal, சிறந்த வாழ்க்கை தத்துவம் கவிதை, வாழ்க்கை தத்துவம் கவிதை and more quotes, status, messages, sms in tamil language.
Table of Contents
வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்
என்ன நடக்குமோ
ஏது நடக்குமோ என்று
யோசித்துக்
கொண்டிருப்பதை விட
முயற்சித்துப் பார்
கிடைத்தால் வெற்றி
இல்லாவிட்டால் அனுபவம்
இரண்டுமே வாழ்க்கைக்கு
தேவை தான்..!
நீ மற்றவர்களால் தூக்கி
எறியப்படும் ஒவ்வொரு
பொழுதும் காகிதமாக
விழாதே..! விதையாக
எழு மீண்டும்
முளைக்க..!

தள்ளாடும் வயது
வரும் முன்பு தனக்கென
சேர்த்துக் கொள்..,
தனித்து விட்டாலும்
தளராமல் தன்மானத்தோடு
தலை நிமிர்ந்து வாழலாம்..!
ஒவ்வொரு பொழுதும்
உன் தேவைகளை நீயே
நிறைவேற்றிக் கொள்
சக மனிதர்களை நம்பி
வாழாதே..! ஏதோ ஒரு
சந்தர்ப்பத்தில் அவர்களின்
சுயரூபம் வெளிப்படும்
போது மனம் உடைந்து
சிதறி விடுகின்றது..!

கண்ணீரின் மொழி அழுத
கண்களை உடையவனும்
மட்டுமே தெளிவாக
புரியும்..!
நீ தேவைப்படும் போது
தேடப்படுவாய் அது வரை
அமைதியாக காத்திரு..!

மரணம் வரையில்
நினைவில் வைக்க
வேண்டியவை.. மாறும்
குணம் உடையவர்கள்
மனிதர்கள்..!
எதுவும் இல்லாமல் பிறந்து
எல்லாம் வேண்டும் என அலைந்து
எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்து
உயிரும் சொந்தமில்லை என உணர்ந்து
உலகை விட்டு ஒருநாள் பறந்து செல்வதுதான்
வாழ்க்கை

வர்ணங்கள் நிறைந்த வானவிலாய்
பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாய்
பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாய் பல
அனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை
பட்சிகளும் பூச்சிகளும்
புட்களும் பதர்களும் பெற்றிடாத
புனிதமான வாழ்க்கைதனை
பெருமாந்தர்கள் பெற்றிடுவார்

வாழ்க்கை எனும் பூந்தோப்பில்
பூக்களும் முட்களும் உண்டு
பல வலிகளைக் கடந்தாலே
பூக்களை கொய்ய முடியும்
மானிடராய் பிறப்பதற்கே நல்
மாதவம் செய்திடல் வேண்டும்
மனித வாழ்க்கை போல
மகத்தானது எதுவுமில்லை

பிறந்து விட்டோம்
என்று நினைத்து
வாழாதீர்கள்..! இனி
பிறக்க போவதில்லை
என்று நினைத்து
வாழுங்கள்..!
நீ யோசிக்காமல்
எடுக்கும் முடிவுகள்
அனைத்தும் உன்னை
யோசிக்க வைத்துக்
கொண்டே இருக்கும்
வாழ்நாள் முழுவதும்..!

Valkai Thathuvam Kavithaigal
போராடிக் கிடைக்கும்
தோல்வி கூட கொண்டாட
வேண்டிய வெற்றி தான்
என்பதை என்றும்
நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்..!
எதிர்பார்ப்பு இல்லாமல்
வாழக் கற்றுக்
கொள்ளுங்கள் அது தான்
வாழ்க்கையில்
சந்தோசத்தை
உருவாக்கும்..!

நமக்கு வாழ்கை பல அனுபவங்களையும்
பாடங்களையும் கற்றுத் தருகின்றது அதில்
முக்கியமான ஒன்று தான் நாம் யார் யாரிடம்
எவ்வாறு பழக வேண்டும் எந்த அளவோடு
பழக வேண்டும் என்பது.
உங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்களை
ஏமாற்றுவது புத்திசாலித்தனம் என்று நினைக்காதீர்கள்
அது தான் துரோகத்தின் உச்சம்.

உங்களுக்கு தெரிந்த விடயங்களை மட்டும் மற்றவர்களுடன்
பேசி பழகுங்கள் இது காலப்போக்கில் உங்கள்
மீதான நம்பிக்கை மற்றும் மரியாதையை அதிகப்படுத்தும்.
சந்தோஷமான நேரத்திலும் துன்பமான நேரத்திலும்
நாம் நினைவில் வைத்திற்குக்க வேண்டிய ஒரு
உண்மை இந்த நிமிடம் கூட நிரந்தரம் இல்லை.

நினைவில் வைத்துக் கொள் உன் வாழ்க்கையில்
உறக்கம் இரக்கம் இரண்டும் அளவோடு தான்
இருக்க வேண்டும். உறக்கம் அளவுக்கு மீறினால்
சோம்பேறி என்பார்கள். இரக்கம் அளவுக்கு
மீறினால் ஏமாளி என்பார்கள்.
யாருக்கும் உன்னை
பிடிக்கவில்லை
என்றால் நீ
இன்னும் நடிக்க
கற்றுக் கொள்ளவில்லை
என்று அர்த்தம்..!

வாய்ப்பு என்பது
பறித்துக் கொள்வதில்லை,
திறமையால் நாம்
தேடிக்கொள்வது..!
திறமையில் கவனம்
செலுத்து வாய்ப்பு
உன்னைத் தேடி வரும்..!
கடுமையான
கஞ்சத்தனம்,
தகுதியற்ற தற்பெருமை,
எல்லையற்ற பேராசை
ஆகிய மூன்றும்
மனிதனை
வீணாக்கி விடும்..!

எதுவும் புரியாத போது
வாழ்க்கை தொடங்குகின்றது
எல்லாம் புரியும் போது
வாழ்க்கை முடிகின்றது..!
உன் தவறை நீ
உணர்ந்து கொண்டு..
நீ அமைதியாகும் போது
தாழ்வதில்லை..
உயருகிறாய்..!

உதிரும் மரங்களும்
பின்பு துளிர்விட்டு தளைத்தெழும்
துன்பங்களை தொடமல் யாரும்
இன்பங்களை அடைய முடியாது
பட்டை தீட்ட தீட்ட
வைரம் பொலிவாகும்
தடைகளை தாண்ட தாண்ட
உன் வாழ்க்கை பலமாகும்

இரவுபோய் பகல் வருவதை போல்
பிறப்புண்டேல் இறப்புண்டு
இயன்றவரை உத்தமராய்
இறுதிவரை வாழ்ந்திடுவோம்
நாம் வாழ்ந்தாலும் ஏசிடும்
துவண்டு வாழ்ந்தாலும் ஏசிடும்
வையகம் இதுதானடா அன்று
பாடினான் ஓர் கவிஞன்

சிறந்த வாழ்க்கை தத்துவம் கவிதை
வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்
உலகமே திரண்டு எதிர்திட்ட போதிலும்
உறவுகளே நம்மைப் பழித்திட்ட போதிலும்
உறுதியாய் நின்று ஜெயித்திடல் வேண்டும்
சாவிலும் இவ்வுலகம் எமை
சான்றோராய் போற்றிட
நல் மனிதராய் வாழ்ந்து
நானிலத்தை வென்றிடுவோம்

சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.
மகான் போல வாழ
வேண்டும் என்று
அவசியம் இல்லை..
மனசாட்சிப்படி
வாழ்ந்தால் போதும்..!

வாழ்க்கை மிகவும்
சுவாரசியமானது..!
இன்று நீங்கள்
அனுபவிக்கும் மிகப்
பெரும் வலிகளே
நாளை உங்களின்
மிகப் பெரும் பலமாக
மாறிவிடுகின்றது..!
முயற்சிக்கு முன்னால்
கேலிகள், கிண்டல்கள்,
துரோகங்கள், சோகங்கள்,
காயங்கள், சோதனைகள்,
தோல்விகள் யாவும்
தோற்று ஒரு நாள்
மாய்ந்து மடியும்..!

இன்பம் வரும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்யாதே..!
அது போகும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்..!
பெரு வெள்ளம் வந்திட்ட போதும்
சிறு துளியென எண்ணி
சிந்தை கலங்காது எப்போதும்
சிறப்புடன் கடந்திட்டல் வேண்டும்

இன்பம் வரும் போது போற்றி
துன்பம் வரும் போது தூற்றாதே
இன்பத்தையும் துன்பத்தையும்
சரிசமமாய் கருதி வாழு
பணம் படைத்திட்ட போதும்
செல்வம் செழித்திட்ட போதும்
செருக்கோடு வாழாது உன்
சுற்றம் போற்ற வாழு

ஏழையாய் ஆனாலும் பெரும்
செல்வந்தனாய் ஆனாலும்
பிறருக்காக வாழ்ந்திடேல்
பெரு மனிதனாய் போற்றப்படுவாய்
அர்த்தமுள்ள வாழ்க்கைதனை
வாழ்ந்திட்ட ஒரு மனிதன்
மகானாய் போற்றப்படுவான்
இதுவே உலகத்தின் நியதி

கிடைத்தற்கரிய அருங் கொடையாய்
கண்டெடுத்த பெரும் புதையலாய்
அளிக்கப்பட்ட இவ் வாழ்க்கையை
ஆனந்தமாய் அனுபவித்திடுவோம்
பிரச்னை என்பது தொலைநோக்கி போலவே நீ
பார்க்கும் பார்வையில் தான் எல்லாம் அடங்கி
இருக்கிறது அதை பெரிதாக நினைத்தால்
பெரிதாகத்தான் தோன்றும் சிறியதாக நினைத்தாள்
பிரச்னை உனக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.
பணம், பொருள் என இந்த இரண்டுமே வாழ்க்கையில்
மனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும்
குணத்தையே மாற்றும் வல்லமை படைத்தது
பணம், பொருள் என இந்த இரண்டுமே
வாழ்க்கையில் மனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள்
மற்றும் குணத்தையே மாற்றும் வல்லமை படைத்தது.
உணர்ச்சிகள் என்ற ஒன்றை உனக்கு அடக்க தெரிந்தால்
வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்ட நஷ்டங்களாலும்
உன்னை ஒன்றும் செய்து விட முடியாது
உணர்ச்சிகள் என்ற ஒன்றை உனக்கு அடக்க தெரிந்தால்
வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்ட நஷ்டங்களாலும்
உன்னை ஒன்றும் செய்து விட முடியாது.
ஒவ்வொரு நீண்ட இரவுகளும்
விடிகின்ற வேளையிலே
நமக்கொரு சேதி சொல்லிடும்
நலம் பெற்று நாம் வாழ
தொலைதூர பார்வையோடு
கண நேரத்தையும் வீணடிக்காது
குறிக்கோளுடன் வாழ்பவனே
வெற்றிக்கனியை சுவைத்திடுவான்
தவம் போன்ற வாழ்க்கையை
தன்னம்பிக்கையோடு போராடி
தான் எனும் அகந்தையின்றி
தனித்துவமாய் வாழ்ந்திடுவோம்
வாழ்க்கை எனும் புத்தகத்தில்
அனுபவங்கள் பல உண்டு
ஒவ்வொரு அனுபவங்களும்
ஒவ்வொரு பக்கங்களாய்
வாழ்க்கை தத்துவம் கவிதை
அரிது அரிது இவ்வுலகில்
மானிடராய் பிறத்தல் அரிது
மானிடாராய் பிறந்திட்டேல்
மனிதத் தன்மையோடு வாழ்தல் சிறப்பு
வாழ்க்கை எனும் பெரும் போரில்
நாம் அனைவரும் போர் வீரர்கள்
பல காயங்களை அடைந்து
வெற்றியை சுவைத்திடுவோம்
மற்றவர்களிடம் குற்றம் என அடையாளம் காணும்
விடயம் நம்மக்கு ஏற்பட்டால் அதை சோதனை
என்று அழைக்கிறோம்.
உன் பாதையை நீயே உருவாக்கிக் கொள்ளும்
தண்ணீராக இரு. வாழ்வில் எதையும் சாதிக்கலாம்.
அடுத்தவர் பாதையை தடுக்கும் பாறையாக இருந்து விடாதே.
மனதில் நஞ்சு வைத்து உதட்டில் தேனாக கொஞ்சி
பேசும் மனிதர்களும் இந்த உலகில் வாழ்ந்து
கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதே.
காகமும் குயிலும் பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று
போல தான் தோற்றமளிக்கும். ஒருவரின் வெளித்
தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடாதீர்கள்.
கடன்களும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப
அளவோடு இருக்க வேண்டும். கடன்களும்
நினைவுகளும் அளவுக்கு மீறினால் இரண்டுமே
தூக்கத்தை பறித்து விடும்.
வாழ்வில் வரும் வலிகளை சிரித்துக் கொண்டே
கடந்து போக பழகிக் கொள்ளுங்கள்.
அப்படியே சிரித்துக் கொண்டே கடந்து
போக பழகிக் கொண்டால் உன்னை விட
வலிமையானவர்கள் யாரும் இல்லை இந்த உலகில்.
ஒரு தவறை செய்தால் ஒதுக் கொள்ள எந்த
சூழ்நிலையிலும் தயங்காதீர்கள் அவற்றை
சரி செய்து கொள்ள முடியும். ஆனால் செய்த
தவறை இல்லை என்று சாதிக்காதீர்கள் பிறகு
அவற்றை வாழ்நாளில் சரி செய்ய முடியாது.
காகமும் குயிலும் பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று
போல தான் தோற்றமளிக்கும். ஒருவரின் வெளித்
தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடாதீர்கள்.
கடன்களும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப
அளவோடு இருக்க வேண்டும். கடன்களும்
நினைவுகளும் அளவுக்கு மீறினால் இரண்டுமே
தூக்கத்தை பறித்து விடும்.
வாழ்வில் வரும் வலிகளை சிரித்துக் கொண்டே
கடந்து போக பழகிக் கொள்ளுங்கள்.
அப்படியே சிரித்துக் கொண்டே கடந்து
போக பழகிக் கொண்டால் உன்னை விட
வலிமையானவர்கள் யாரும் இல்லை இந்த உலகில்.
ஒரு தவறை செய்தால் ஒதுக் கொள்ள எந்த
சூழ்நிலையிலும் தயங்காதீர்கள் அவற்றை
சரி செய்து கொள்ள முடியும். ஆனால் செய்த
தவறை இல்லை என்று சாதிக்காதீர்கள் பிறகு
அவற்றை வாழ்நாளில் சரி செய்ய முடியாது.