முதல் காதல் தோல்வி வலி கவிதைகள் | Mudhal Kadhal Tholvi Kavithai

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்: காதல் தோல்வி கவிதைகள், Mudhal Kadhal Tholvi Kavithai, முதல் காதல் வலி கவிதைகள், Tamil Sad Love Quotes, alone sad quotes in tamil and more quotes, status, messages, sms and more in tamil language.

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்
முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

இதயமும் ஒரு சிறை தான் இதில்
குற்றம் செய்பவர்கள்
மாட்டிக் கொள்வதில்லை.. பாசம்
வைத்தவர்கள் மட்டுமே மாட்டிக்
கொள்கிறார்கள்..!

என்னை மறந்து விடு என்று
உன்னை திட்டி விட்டு..
இறைவனிடம் வேண்டுகிறேன்..
என்னை மறந்து விட கூடாது
என்று..!

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்..
அடுத்த ஜென்மம் என்று ஒன்று
இருந்தால் அதில் நீயே வேண்டும்..
உறவாக மட்டுமல்ல.. உயிராக..!

ரோஜாவின் மேல் படிந்திருக்கும்
பனித்துளியை நாம் ரசிக்கிறோம்..
யாருக்கு தெரியும் அது செடியை
விட்டு பிரியப் போகும் ரோஜாவின்
கண்ணீர் துளிகள் என்று..!

உன் மனதில் நான் எதிரியாக கூட
வாழத் தயார்.. அது அழகான
ரோஜா செடியில் முட்கள் போல..!

இதயத்தில் இருந்தால் கூட
மறந்து விடலாம்.
ஆனால், துடிக்கின்ற இதயமே
நீயாக இருந்தால் எப்படி மறப்பது.!
இறப்பது தான் உன்னை மறப்பது.!

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

காதலில் தோற்றவர்கள் எல்லாம்
காதலை மறந்து வாழவில்லை
மனதுக்குள் மறைத்து தான்
வாழ்கிறார்கள்.

அழும் போது ஆறுதல்
சொல்வதில் ஆரம்பித்த காதல்,
ஆறுதல் சொல்லக் கூட
ஆள் இல்லாமல் முடிகிறது.

Mudhal Kadhal Tholvi Kavithai

பேசிப் பேசி சிரிக்க வைத்து
என் சோகத்தை தூசிபோல்
தட்டி விட்டவள்.
இப்போது!
உறங்கி விட்டாளோ!
என்னை உறங்க விடாமல்
நினைவுகளுடன் பேச விட்டு.

கனவுகள் கலைந்ததடி,
காட்சிகள் முடிந்ததடி,
இதயம் வலிக்குதடி,
கண்கள் கலங்குதடி,
உதிரம் சிந்துதடி,
மனது கனக்குதடி,
நீ எங்கே சென்றாயோ!

Mudhal Kadhal Tholvi Kavithai

பாறையாக இருந்த என் மனதில்,
காதலை ஊற்றெடுக்க செய்ததும் நீதான்.
காதல் ஊற்றில் கல் வைத்து அடைத்ததும் நீதான்.

மறந்து விட்டாயா என்று கேட்டாய்?
எப்படி மறப்பேன்.
பேசும் உன் விழிகளை.
வதைக்கும் உன் இதழ்களை.
அணைக்கும் உன் கரங்களை.
சிதைக்கும் உன் புன்னைகைகளை.
எப்படியடி மறப்பேன் நான்.

Mudhal Kadhal Tholvi Kavithai
Mudhal Kadhal Tholvi Kavithai

காதல் தோல்வி கவிதைகள்

வெந்து போன இதயத்தில் வந்து
வந்து தந்து செல்கிறாய்.
சில நேரம் கனவாய்,
சில நேரம் நினைவாய்,
சில நேரம் நிலலாய்.
ஒருமுறை வந்து போயேன் நிஜமாய்.

இன்னும் உன்னை தொலைக்கவில்லை
உனக்கு வேறு வாழ்க்கை வந்த பிறகும்
என் இதயம் உன்னை விட்டு போகவில்லை அன்பே.!

Mudhal Kadhal Tholvi Kavithai

பிரியமே பிரியத்தை கொடுத்து விட்டு..
நீ காணாமல் போவதால் நான் காணாமலே போய் விட்டேன்.

எதிர்பாரா நேரத்தில் வெளிப்படுத்தப்படும் காதலுக்கு..
மதிப்பு கொஞ்சம் குறைவுதான்.!

பிறப்பில் இருந்து இறப்பு வரை
பிரிவில் தான் முடிகிறது
காதல் மட்டுமே பிரிந்தும்
பிரிய முடியாத வலியாய் தொடர்கிறது.!

Mudhal Kadhal Tholvi Kavithai

சந்தோஷமாக இருப்பது போல் பொய்யாக நடித்தே
ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறேன்
உண்மையாகவே நான் சந்தோஷப்பட
நீ என்னோடு இல்லை என்ற கவலை
என்னோடே இருக்கிறது.

“என்னை மறந்து விடு” எனும்
வார்த்தையின் நீளம்
சிறியது தான் ஆனால்..
அதன் வலி சாகும் வரை..!

Mudhal Kadhal Tholvi Kavithai

அன்று உனக்கு பிடித்த
அனைத்தையும் நேசித்தேன்..
இன்று உனக்கு பிடிக்காத
என்னையும் வெறுக்கிறேன்..!

நீ என்னை காதலித்து
ஏமாற்றி விட்டாய் என்று
ஒரு போதும் சொல்ல மாட்டேன்..
காதலித்து இருந்தால் ஏமாற்றி
இருக்கமாட்டாய்..!

Mudhal Kadhal Tholvi Kavithai

Mudhal Kadhal Tholvi Kavithai

இந்த உலகில் உன்னை
நேசித்தது என் தவறல்ல
அன்பே..உலகத்திலேயே உன்னை
மட்டும் உயிருக்கு உயிராய்
சுவாசித்தது தான் என் தவறு..!

உன்னை நான் மறந்து விட்டேன்
என்று.. நீ எண்ணும் வேளையில்
பிரிந்திருக்கும் என் உயிர்..!

Mudhal Kadhal Tholvi Kavithai

காதல் என்ற மூன்றெழுத்தில்
காவியம் படைத்து
கவி வடிக்க என்னோடு கலந்தவள்.
என்னை கண்ணீரில் கவி வடித்து
காவியம் படைக்க வைத்து
சென்று விட்டாள் வெகு தூரம்.

மென்மையான ரோஜாவை காதல்
என்று கையில் ஏந்தினேன் நான்.
அதன் முட்கள் என் இதயத்தை
குத்தி கிழிக்கும் என்று அறியாமல்.

Mudhal Kadhal Tholvi Kavithai

கதை பேசி கனவுகள் தந்தாய்.
கனவுகள் தந்து நினைவுகளை தின்றாய்
நினைவுகளை தின்று கவிதைகள் பல தந்து
காணாமல் போகிறாய் ஏனடி அடி ஏனடி

நீ என்னில் பாதி என்று எண்ணி
இருந்தேன் இதுவரை.
இன்று தான் புரிந்தது,
உனக்கு நான் மீதி தான் என்று.

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

நம் பெயர்களை செதுக்கிய மரம் கூட
இன்னும் பசுமையாக உள்ளது.
காய்ந்து போன நம் காதல் போல் இல்லாமல்

உனை விட்டு விலகுவதா எனத்தெரியவில்லை..
உனை பிரிந்து வாழமுடியும் என்ற நம்பிக்கை இல்லை..
என் வலியோ உனக்கு புரியவில்லை
அந்த வலியை உனக்கு கொடுக்கவும் நான் விரும்பவில்லை..
பிரிகிறேன் உனக்காக வாழ்கிறேன் உன் காதல் நினைவுகளில் எரிந்து.!

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

என்னை நிராகரிக்கவும் என்னை விட்டு செல்லவும்
உனக்கு எப்போதும் உரிமை உண்டு..
நீ என்னை விட்டு பிரிவதால்
என் மனம் வேதனை படும் என்று
நீ வருத்தப்படாதே.. ஏன் என்றால்
நீ என்னை மறுதலித்த போதே
நான் இறந்து விட்டேன்.!

காதல் தோல்வியை கொடுக்கும் போது தான்
எத்தனையோ பேர் அருகில் இருந்தும்
தனிமையில் சூழ்ந்து விடுகிறோம்..
இறக்காமலே நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்
முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

உன்னுள்ளே என்னைப் புதைத்து விட்டாய்
காதலோடு என்னைத் தனிமையாக்கி
பறந்து சென்றாய் வெளிவர முடியவில்லை..
உன் காதல் தோட்டா இல்லை
என்னுள் இருந்து வெளியே எடுக்க.

நினைக்கவும் முடியாமல்..
மறக்கவும் முடியாமல்..
தவிக்கிறேன் நான் உன்னையல்ல
என் காதலை..!

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

நீ என்னை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவுகளை என்னிடம்
இருந்து பிரிக்க முடியாது..!

நான் நேசிக்கும் அளவு
நீ என்னை நேசிக்க வேண்டாம்..
ஆனால் என் நேசம் எந்தளவு என்று
புரிந்து கொண்டாலே போதும்..!

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்
முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

முதல் காதல் வலி கவிதைகள்

நிஜமான உன்னை தொலைத்து
நினைவுகளோடும் கனவுகளோடும்
உறவாடும் துரதிஷ்டம் எனக்கு..!

நீ என்னுடன் இல்லாமல் இருக்கும்
தருணங்களில் நூறு உறவுகள்
அருகினில் இருந்தாலும் நான்
தேடுவது “தனிமை” தான்..!

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

என்னை மறந்து விடு என்று
இலகுவாய் சொல்லிவிட்டாய்..
அவ்வளவு இலகுவாய் மறக்க
முடியுமென்றால் அது
காதலே இல்லை..!

நீ எனக்குள் விதைத்து சென்ற காதலுக்கு,
என் கண்ணீர் தான் தண்ணீர் போலும்!
அதனால், நான் போகும் கல்லறைக்கு
என் கண்ணீர் தான் பன்னீர் போலும்..!

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

எல்லோரும் உன்னை காதலித்து,
விட்டு போனர்கள்…!
நான் மட்டும் உன்னை காதலித்து
விட்டு, பரிதவித்து போனேன்…!
உன்னுடன் வாழ வேண்டும் என…!

அழகான தருணத்தில் அளவில்லா காதலயும்.
மறக்கமுடியா தருணத்தில் மரண வலியையும் தந்தவள்.
வாழ்க்கைக்கு வசந்தமாக வந்தவள்.
காரணம் ஏதும் சொல்லாமல்
காற்றோடு காற்றாக கலைந்து சென்றவள்.

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

அவள் அன்புக்கு விலை
அதிகம் என்பதால் தான்.
இந்த ஏழையால் விலை
பேச முடியாமல் போய்விட்டது.

இருந்திக்கலாம் இன்னும்
சில காலம் என்னோடு.
சிரித்து வாழ்ந்திருப்பேன்
நானும்.

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

சில காலங்களில் அனைத்தும் மாறிவிடும்
என்று நான் நினைப்பது பொய் என்று
பிரிவின் வலி மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது..
காலம் தான் கடக்கிறது
காதல் நெஞ்சில் உயிரோடு இருக்கிறது
என்பதை என்னுள் புரிய வைக்கிறது.

என் மனம் வலிப்பதற்கு காரணமும் நீ தான்..
அந்த வலிக்கு மருந்தும் நீ தான் அன்பே.!

முன்பு உன்னோடு பேசிக்கொண்டு நாட்கள் நகர்ந்தன
ஆனால் இப்போது உன் நினைவுகளோடு நாட்கள் நகர்கின்றது.

பிரியும் முன் அந்த வலியை உணர முடிவதில்லை..
பிரிந்த பின் அந்த உலகத்தில் இருந்து வெளிவர முடியவில்லை..
முடிவு எதுவென்று தெரிவதில்லை..
தெரிந்தாலும் மாற முடிவதில்லை.

மாற முடியாது என்று நீ சொல்லிய வார்த்தைகளும் பொய்யாகிவிட்டது..
நீ மாறி வேறு ஒருவனை காதலிக்கும்போது

நம் காதல் முடிந்து விட்டது என்று
எண்ணி உயிரைத் துறக்கவும்
முடியவில்லை.. இன்னும் தொடரும்
என்று எண்ணி உயிரோடு
இருக்கவும் முடியவில்லை..!

நூறு முறை பிறக்க வைத்தாய்
உன் அன்பால்.. கோடி முறை
இறக்க வைத்தாய் உன் பிரிவால்..!

Tamil Sad Love Quotes

வெறுத்துப் போவோரை விரட்டிப்
பிடிப்பது தவறு என்று தெரிந்தாலும்
இதயத்திற்கு தெரிவதில்லை..!

உன்னை நேசித்த மனதால் வேறு
எதையும் நேசிக்க முடியவில்லை..
நேசிப்பது எல்லாம் உன்னை
போல இல்லை..!

கடந்த கால காதல் நினைவுகளை
கடப்பது, கடலை கடப்பதை விட
கொடுமை தான் போலும்…!

நான் காதலித்ததன் விளைவாக
கவிதை எழுதுவது பழக்கமாகிவிட்டது.
கண்ணீர் விடுவது வழக்கமாகிவிட்டது.
காதல் மட்டும் கண்ணுக்கு தெரியாத
காற்றாகி கரைத்து மறைந்து விட்டது…!

பாழாய் போன மனம்
உன்னை நினைத்து
தானாய் கறையுது.
ஏதேதோ சொன்னாலும்
ஏனோ அடங்க மறுக்குது.
கனவிலும் உன்னை
தேடி தனியே அலையுது.
அங்கும் உன்னை காணாமல்
தவியாய் தவிக்குது.

உன் கன்னம் தொட்ட என் கைகள்
வேறொரு கன்னம் தொட மறுக்கிறது.
காரணம் உன்னை தொட்டதற்காக அல்ல,
தொட்டதனால் நான் பட்ட வேதனைகள்
மீண்டும் வேண்டாம் என்பதற்காக…!

இரக்கமற்ற உன் இதயத்தால்
இறந்து போனது நம் காதல்..!

முதல் காதல் எப்போதும்
தொலைவது இல்லை..
அவரவர் மனங்களுக்குள்
பூ செடியாய் மலர்ந்து
கொண்டே இருக்கும்..!

நீயும் ஒரு விஷம் தான்
அன்பெனும் அமுத விஷம்..
கொஞ்சம் கொஞ்சமாய்
கொள்கிறாய் என்னை..!

நீ என்னை மறந்தாலும், மறுத்தாலும்,
வெறுத்தாலும், விட்டு விலகிப்போனாலும்,
வாழ்ந்திருப்பேன் கற்பனையில்
உன் நினைவுகளோடு.
காத்திருப்பேன் கல்லறையிலும்.
உன் காதலோடு…!
“இது கவிதைக்காக மட்டுமே”

நான் ஏங்காத நாள் இல்லை,
உன்னை எண்ணி…!
என் இணையே என் துணையே
எனை மீட்டு விடு. மீட்டு தந்து விடு.
மீண்டும் வந்து விடு எனக்காய்..!

கண்ணீர் வடிக்க தயாராக இல்லை
கண்மணியே நீ போய்விடு..!
கால்கள் போன போக்கில் போக போகிறேன்.
கொஞ்ச நாள் என்னை வாழவிடு..!

விடியலில் உதித்த ஒரு காதல் என்
வாழ்க்கையை இருளில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறது.

நினைவாக நீ இருக்கும் வரையிலும்
நிம்மதி என்பது எனக்கில்லை.

ஒருவரிடம் இருந்து பிரிவதென்பது
எவ்வளவு வலி நிறைந்ததோ
அதை விட வலி நிறைந்தது..
நம்மை விட்டு பிரிய நினைப்பவரிடம்
போகாதே என கெஞ்சுவது.

கவலையை கூட தூக்கி சுமக்கின்றேன்
ஒரு குழந்தையை போல
அதற்கு வலித்து விடக் கூடாதென்று..
ஏனெனில் கண்ணீர் துளியையும்
நீதானே முதன்முதலில்
அறிமுகம் செய்து வைத்தாய்
என் விழிகளுக்கு.!

மறக்க நினைக்கிறேன் உன்னோடு
பேசாத நாட்களை அல்ல..
உன்னோடு பேசிய அந்த நாட்களை..!

பிரியும் முன் அந்த வலியை உணர முடிவதில்லை..
பிரிந்த பின் அந்த உலகத்தில் இருந்து வெளிவர முடியவில்லை..
முடிவு எதுவென்று தெரிவதில்லை..
தெரிந்தாலும் மாற முடிவதில்லை.

மாற முடியாது என்று நீ சொல்லிய வார்த்தைகளும் பொய்யாகிவிட்டது..
நீ மாறி வேறு ஒருவனை காதலிக்கும்போது

நம் காதல் முடிந்து விட்டது என்று
எண்ணி உயிரைத் துறக்கவும்
முடியவில்லை.. இன்னும் தொடரும்
என்று எண்ணி உயிரோடு
இருக்கவும் முடியவில்லை..!