Tamil Kadhal Kavithaigal – தமிழ் காதல் கவிதைகள் | Images

We have collected best quotes of Tamil Kadhal Kavithaigal, Tamil Love Quotes.

  • Tamil Love Quotes
  • Love Kavithai In Tamil
  • தமிழ் காதல் கவிதைகள் sms 
  •  சிறந்த காதல் கவிதைகள் 
  • காதல் கவிதை

Tamil Kadhal Kavithaigal

ஒரு விழி
நீ மறு விழி
நான் இரு விழிகள்
கொண்டு
அமைப்போமொரு
காதல் உலகை
நாம் வசிக்க

புது விடியல் உதிப்பது புதிய நாட்களுக்கு
மட்டும் அல்ல உன் வாழ்க்கையின்
மாற்றங்களுக்கும் தான்.

வானம் என்ற ஒன்றிற்கு இல்லாத
எல்லை போலவே உன் முயட்சிகளுக்கும்.

வெற்றி பெறும் வரை உன் போராட்டத்திற்கு
விடுமுறை ஒன்றை அளித்து விடாதே.
மனோபலத்துடன் முன்னோக்கி செல்…

கண்ணீர் என்றுமே விலை மதிப்பு
மிக்கது அதில் தவறான நெஞ்சுக்குக்கு
இடம் அளித்து உன் பலத்தை குறைத்து
விடாதே.

நீ நேசிக்கும் ஒருவரின் மனதை
தேடுவதை விட உன்னை நேசிக்கும்
இதயத்தை மனமார ஏற்று கொள்.

புத்தகத்தின் வாயிலாக கற்கும்
பாடத்தை விட அனுபவத்தினால்
கற்று கொண்ட பாடம் என்றுமே
நன்மையை தரும்.

நீ எனக்காக கண்ணீர் சிந்துவாயோ…?
இல்லையோ…? நான் உனக்காக
உயிரையே தந்திடுவேன்…

ஒருவரை வீழ்த்த வியூகம் வகுக்கலாம்
ஆனால் வில்லங்கம் வளர்க்க கூடாது …

என்றோ
நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில்
எல்லாம்
காதல் நிரம்பி
வழியுதே
இன்று
என் கண்களுன்னை
காணும் போது

உன் கண்ணாமூச்சி
ஆட்டத்தில்
களைத்து போனது
என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து

எந்த ஜென்மத்தில்
செய்த தவமோ
இந்த ஜென்மத்தில்
கிடைத்தாய்
நீயும் வரமாய்
என்னவனே

உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…

வாழ்க்கையில் எவ்வளவு சிக்கல்கள்
இருந்தாலும் ஆறுதல் சொல்ல ஒரு
உண்மையான உறவு அமையும்
போது கஷ்டம் கூட இஷ்டம் ஆகி
விடுகிறது.

“நான் நினைப்பது எதுவும்
நடப்பது இல்லையே”
என்று எண்ணாதே…
“நான் நினைத்ததை நடத்தி காட்டுவேன்”
என்று எண்ணி பார் நீ வென்று
விடுவாய் உனக்கான சவாலில் …

நீ நல்லவன் என்று நிரூபிக்க
ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்
ஒரு சிறு குறை உன்னிடம்
இருந்தால் கூட இந்த உலகம்
உன்னை கெட்டவன் என்று தீர்மானித்து விடும்.

அன்பு என்பது தாய் போன்றது நீ
விலகி போனாலும் கூட உன்னை
வெறுக்க தெரியாது அதற்கு.

கடந்து போன நாட்களில் நீ செய்த
தவறுகளை நினைத்து ஏங்குவதை
விட வர போகும் உன் எதிர்கால
நாட்களுக்காக அதை நீ சரி
செய்து கொள்ளலாம்.

உனக்கான இடத்தை யாரும்
பிடிப்பது இல்லை நீ தான் தவற
விடுகிறாய்.

பிடித்து விட்டால் மறக்க
தெரியாமல் குழந்தை போல அடம்
பிடித்து நிற்பது தான் மனதின் குணம்.

காலையில் சூரியன் உதிக்காவிடில்
பகல் என்பது இல்லை. அது போலவே
நீ வாழ்க்கையில் ஜொலிக்காவிடில்
வெற்றி என்பது உனக்கு
கிடைப்பது இல்லை.

உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே

எனக்கு
பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால்
உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்

நீ
கவனிக்காமலே
கடந்து
செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது…!

பயணிப்போம்
ஒரு பயணம்
கரம்பற்றி
களைப்பாகும்
வரை
காதல் தேசத்தில்…!

உன்னை
நினைத்து
என்னை
மறப்பதுதான்
காதலென்றால்
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
எனை மறந்து

நீ
கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்

மனதில் காரிருள்
சூழ்ந்தபோது
உன் அன்பெனும்
ஜோதியில்
வாழ்வை
ஒளிமயமாக்கினாய்

உன்னளவுக்கு
அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்

தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது

மொத்த
கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய்
தீண்ட

மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்…

விடுதலையில்லா
சட்டம்

இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது

உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு…

ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட

குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்…

பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…

துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்

மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ…

விடுவித்து
விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்…

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது

சாலையோர
நடைப்பயிற்சியில்
காலைநேர
தென்றலாய் நீ…

விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்…

நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்ந்தது
உன் காதல்
மொழியில்

நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

எந்த ஒரு விலையும் நிர்ணயிக்க
முடியாதது காதல்… விலைக்கே
வாங்க முடியாதது அன்பு…

நீ ஒருவரை மனம் நோக செய்யும்
வலியை உன்னை ஒருவர் மனதளவில்
காயப்படுத்தும் போது தான் புரிந்து கொள்ள முடியும்.

வாழ்க்கை மிகவும் அழகாகிறது நீ
விரும்பும் ஒருவரின் இதயத்தில்
இடம் பிடிக்கும் போது.

“பொய்யான மனிதர்களுக்காக
உன்னுடனே இருக்கும் உண்மையான
என்னை அழ வைத்து பார்க்காதே”-
இப்படிக்கு கண்கள்.

புரிதல் மட்டும் இல்லையென்றால்
உறவில் விரிசல் என்பது தானாகவே
அமைந்து விடுகிறது.

உன்னுடைய பலம் எவ்வளவு
என்பது நீ நேசித்த ஜீவனை
இழக்கும்போது உணர்வாய்.

“கவலைகளை இடம் தெரியாமல்
மறைத்து வைப்பேன் துக்கங்களையும்
தூள் தூளாக்குவேன் நீ என்னை நாடினால்”-
இப்படிக்கு உன் புன்னகை.

வருவேன்
என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்…

காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீயிருந்தால்

தனிமையும்
பிடித்துப்போனது
என்னுடன்
உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்

தொலைவில்
உன் குரல்
கேட்டாலும்
மனமேனோ
பறக்கின்றது
பட்டாம்பூச்சாய்

ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன்
அருகாமையைபோலாகுமா

நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய
வார்த்தைகளோடு
மனதுக்குள்

உலகம் சுழல்வது
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுழல்வது
நிற்காது அன்பே

தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக

பூட்டி விட்டேன்
இதயத்தை
எங்கேனும் தொலைத்துவிடு
திறவுகோலை மீண்டும்
தொலையாமலிருக்க
என்னிதயத்திலிருந்து
என்னவன்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…

காதல் கவிதைகள்
எதற்கு என் காதலே
கவிதையாக அமைந்து
விட்ட பிறகு..!

இரவில் உறக்கம் என்னை
ஆட்சி செய்ய என்
உறக்கத்தை ஆட்சி
செய்கிறது உன் கனவுகள்..!

அழகு எனும் சொல்லிற்கு
உண்மையான அர்த்தத்தை
உணர்த்தியவள் நீ தான்..!
அழகு என்பது உண்மையான
அன்பு என்று எனக்கு புரிய
வைத்தவள் நீ தான்…!

கவிதைகள் போல
இதமான மன
உணர்வைவையும் மன
நிறைவையும் தருபவை
உன் காதல் தான்…!

முகம் காணாமல் இருந்தாலும்
உன் குரல் கேட்காமல்
இருந்தாலும் என் அன்பிற்கும்
காதலிற்கும் உரித்தானவள்
நீ ஒருத்தி மட்டும் தான்
என்பதை நினைவில்
வைத்துக் கொள்.

வாழ்க்கையை நீ இழக்கும்
நிலைக்கு தள்ளப்பட்டாலும் கூட என்றுமே
உன்னுடைய நம்பிக்கையாக நிற்கும்
தன்னம்பிக்கையை மறந்து விடாதே.

கண்ணும் பெண்ணும்
எழுத, கல்லும் மண்ணும்
அவளை காதல் செய்யும்!

உன்னை காணும் அந்த
சில நொடிகளுக்காக
பல மணி நேரம் காத்திருக்கும்
அந்த நேரத்திற்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
காதலின் உயரம்.

இன்னும் எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை
காதலிக்க தேடி வருவேன்.

இதயம் துடிப்பது சாதாரண
விடயமாக இருக்கலாம்
ஆனால் என் இதயம் துடிப்பது
உனக்காக மட்டுமே..!

சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்…!

உன்
அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க

மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்…!

அடைமழையில்
தப்பித்து
உன் அனல்
பார்வையில்
சிக்கிக்கொண்டேன

வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க…!

என்
உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு…!

இருவரி
கவிதையொன்று
இணைந்து
எழுதிடுவோம்
இதழ்களிலே

விழி
திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட

நீயில்லா
பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது

என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து

மௌன
கவிதை நீ
ரசிக்கும்
ரசிகை நான்

சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான்
உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்

என்னை
துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது

ஏதேதோயெழுத
நினைத்து
உன் பெயரை
எழுதிமுடித்தேன்
கவிதையாக

நீ
நலமா
எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது
மனம்…

துடிக்கும் இதயம் கூட
நின்று போகலாம் ஆனால்
நின்ற இதயம் கூட மீண்டும்
துடிக்கும் உன் அழகான
நினைவுகள் என் இதயத்தில்
பதிந்திருப்பதால்..!

நொடிக்கு நொடி மூச்சுக்
காற்று போல என்
இதயத்தை உரசி செல்கிறது
உன் நினைவுகள்..!

காற்றோடு
கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன்
நானும்…

மணலில்
கிறுக்கியதை
அலைவந்து
அழித்தாலும்
நாம் மனதில்
கிறுக்கியது
மரணம்வரை
அழியாது…

ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க…

ஓசையின்றி
பேசிடுவோம்
விழிமொழியில்…..
ஒரு முறை
நோக்கிடுயென்
பார்வையை

உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்…

கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்…

கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக…

பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்

இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்…
(ஆனந்த யாழாய்)

இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்…

உன் நினைவுகளை
மீட்டியே
வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்

நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

யார்
பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை
தொடருது

உன்னிதய
துடிப்போடு
என்பெயரும்
கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது….

விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கின்றாய்
அழகிய
தருணங்களை…

எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை

மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்

நீ அழகாக இருந்தால் தான்
உன்னை விரும்புவேன்
என்பதல்ல காதல் நீ எப்படி
இருந்தாலும் உன்னை
மட்டும் தான் விரும்புவேன்
என்பதே உண்மை காதல்.

மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்.
மீண்டும் ஒரு பிறவி என்று
இருந்தால் அதிலும் நீ தான்
என் காதலாக வேண்டும்.

என் காதலுக்கு உரியவளே
உன் முகத்தை பார்த்தால்
போதும் வலிகளை கூட
சுகமாக உணர்ந்திடுவேன்.
உன் முகம் காண
காத்திருப்பதும்
ஒரு சுகம் தான்.

காதலில் சிறு பிரிவும்
பெரிய சண்டைகளும்
வருவது ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்வதற்கே..!
இதை புரிந்து
கொண்டவர்களுக்கு பிரிவு
என்பது இல்லை..!

என் தாயாக உன்னை
நினைக்கிறன் காதலியாக
அல்ல..! என் தாயின்
அன்பும் அரவணைப்பும்
உன்னிடத்தில் கண்டேன்..!

என்னை அறியாமல் உன்
மீது அளவு கடந்த பாசத்தை
வைத்து விட்டேன்..! அதனால்
தான் உன் சிறு மாற்றங்கள்
கூட என்னை அதிகம்
காயப்படுத்துகின்றது..!

தட்டி விடவும் தோளில்
தட்டிக் கொடுக்கவும்
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் என்னை
கட்டி அணைத்து அன்பு
செலுத்த உள்ள உறவு
நீ மட்டும் தான்.

போதைப் பழக்கம்
இல்லாத நான்
தினம் தினம்
போதையாகிறேன்
உன் விழிகளை
காணும் போது.

தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..

காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்…

Leave a Comment