Tamil WhatsApp Status | தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் and Quotes | Images

We have collected best quotes of Tamil WhatsApp Status, Tamil Status.

  • WhatsApp Status in Tamil Imagegs
  • Tamil status

Tamil WhatsApp Status

உங்கள் தனித்திறமையை
பற்றி அறியாதவர்கள்
ஏதாவது குறை
சொல்லிக்கொண்டு இருந்தால்
அதை நினைத்து
தயவுசெய்து
கவலைப்பட்டுக்கொண்டு
இருக்காதீர்கள்…!

அடுத்தவர் முதுகில்
சவாரி செய்யும்
சிலர் அறிவதில்லை
சொந்தகால்களின்
வலிமையை…!

பொறாமையில்
யாரையும் வீழ்த்த
நினைத்தால்
நீதான் நிம்மதியிழந்து
தவிப்பாய்

எண்ணங்களும் நோக்கங்களும்
சரியாகவும் உண்மையாகவும்
இருந்து விட்டால்
உறவுகளை
உருவாக்க வேண்டிய
தேவை இல்லை
தானாகவே அமைந்து
விடுகிறது…

கண்டஇடத்திலும்
கொட்டக்கூடாதது
குப்பைகள் மட்டுமல்ல
நம்
வீட்டுப்பிரச்சனைகளையும் தான்

வசதியாயிருக்கும்போதே
எளிமையாக
வாழ கற்றுக்கொண்டால்
ஏழ்மைநிலைக்கு தள்ளப்பட்டாலும்
மனம் ஏங்காது
வாழ்ந்தவாழ்க்கையை நினைத்து

மகிழ்ச்சியாக
வாழ்க்கை நகரும்
போது மரணபயமும்
எட்டிப்பார்க்கும்…
மரணம்
வந்துவிடக்கூடாதென்று

உலகம் ஒரு விசித்திரமான
கல்லூரி. இங்கே பாடம்
சொல்லிக்கொடுத்துத் தேர்வு
வைப்பது இல்லை. தேர்வு வைத்த
பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

தாங்கள் செய்யும் தவறுகளுக்கு,
அவரவர்கள் சூட்டிக்கொள்ளும்
அருமையான பெயர் தான் அனுபவம்.
-கென்னடி

எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக்
கொடுக்க என்னால் முடியாது;
அவர்களை சிந்திக்க வைக்க
மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்

சிக்கனமாக வாழும் ஏழை,
சீக்கிரம் செல்வந்தனாவான்
– செனேகா

முடியாது என்று சொல்வது மூட
நம்பிக்கை! முடியுமா என்று
கேட்பது அவநம்பிக்கை!
முடியும் என்று சொல்வதே
தன்னம்பிக்கை!

விதைத்துக்கொண்டே இரு.
முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.

நீ வெற்றியடைவதை
உன்னைத் தவிர, வேறு யாராலும்
தடுக்க முடியாது – ப்ரெமர்

நம்பிக்கையோடு உன் முதலடியை
எடுத்து வை. முழுப் படிக்கட்டையும்
நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
Martin Luther King Jr.

அன்பில்லாத இடத்தில் தான் கோபம்,
முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும் –
இங்கர்சால்

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும்
நம்புவது அபாயகரமானது.
அதைக் காட்டிலும் ஒருவரையும்
நம்பாதிருப்பது மிகவும்
அபாயகரமானது. –
அப்ரஹாம் லிங்கன்

எத்தனை துன்பங்கள்
பகைவர்களால் வந்தாலும்,
அதை அன்பாலேயே வென்று
விடுங்கள் – காந்திஜி

நீ பிறரின் குணாதிசயங்களைக்
கணிக்கத் துவங்கினால் அவர்
பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
அன்னை தெரசா

வாழ்க்கை என்ற ஆற்றையோ,
கடலையோ கடப்பதற்குப்
பெண் என்ற படகோ,
கப்பலோ அவசியம் தேவை
காண்டேகர்

தன்னைத் தானே பாதுகாத்துக்
கொள்வதே பெண்களுக்கு அழகு –
ஒளவையார்

பெருமைக்காரன் கடவுளை
இழப்பான், கோபக்காரன்
தன்னையே இழப்பான்,
பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.

ஒருமுகப்படுத்தும் ஆற்றல்
வளரவளர அதிக அளவில்
அறிவைப் பெறலாம். ஏன்
என்றால் இந்த வழிதான் அறிவைப்
பெறுவதற்கு உரிய ஒரே வழி.
எந்த ஒரு வேலை ஆனாலும்
மனதை ஒருமுகப்படுத்தும்
ஆற்றல் வளரவளர மேலும்
சிறப்பாக அந்தக் காரியத்தைச்
செய்து முடிக்கலாம்.
-சுவாமி விவேகானந்தர்.

சுயமாக முன்னேறிய மனிதன்
என்று ஒன்று கிடையாது. எனக்கு
அதிக உதவிகள் கிட்டின. நான்
கண்டுகொண்டது என்னவெனில்,
நீ உழைக்கத் தயாராய் இருந்தால்,
பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள்.

உன்னிடம் மறைந்திருக்கும்
ஆற்றல்களை வெளிக்கொணரும்
வழி விடா முயற்சியும், தொடர்ந்த
உழைப்புமே ஆகும்; வலிமையோ,
புத்திசாலித்தனமோ அல்ல.

அன்றாட வாழ்வின் சாதாரன
விஷயங்களையும், அசாதாரன
முறையில் செய்யும்போது உலகின்
கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.

உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன்,
அஞ்சாமல் செயலில் ஈடுபடு.
எங்கிருந்தாவது உதவி உன்னை
வந்து சேரும். நம்பிக்கை இருந்தால்,
செயல் வெற்றி பெறும்! –
சுவாமி விவேகானந்தர்

ஒழுக்கத்துடன் வாழ்வதுதான்
சிறந்த நாகரிகம்

ஒரு மனிதனின் உண்மையான
தன்மையை அறிய வேண்டுமானால்,
அவனுக்கு அதிகாரத்தை
கொடுத்துப் பாருங்கள்.

இங்கர்சால் உன்னிடம் மறைந்திருக்கும்
ஆற்றல்களை வெளிக்கொணரும்
வழி விடா முயற்சியும், தொடர்ந்த
உழைப்புமே ஆகும்; வலிமையோ,
புத்திசாலித்தனமோ அல்ல.

Sir Winston Churchill . அரிய செயல்கள் அனைத்தும்
விடாமுயற்சியாலேயே அடையப்
பெற்றிருக்கின்றன; வெறும்
வலிமையால் மட்டும் அல்ல.

எப்போதும்
ஒரே மாதிரி
உண்மையாக
இருப்பவர்களை விட
ஆட்களுக்கும்
சூழ்நிலைகளுக்கும்
ஏற்றார் போல்
மாறுபவர்களையே
இந்த போலி உலகம்
பெருமையாக ஏற்றுக் கொள்கிறது

தெளிவான
மனநிலை உள்ளவர்களின் இலக்குகள்
எளிதான
முறையிலே செய்து முடிக்கப்படும்
உண்மையும்
சத்தியமும்
உன்னிடமில்லை என்றால்
இந்த உலகத்திலே
எங்குபோய் தேடினாலும்
அது உனக்கு கிடைக்க
சாத்தியமே இல்லை

நீ வெற்றிபெற வேண்டுமானால்
ஒரு விடியலுக்காகவோ
நல்ல நேரத்திற்காகவோ
காத்திருக்காதே
ஒவ்வொரு நாளும்
எல்லோருக்கும் விடிவதில்லை
நல்ல நேரம் என்பது
எல்லோருக்கும்
ஒரே நேரத்தில்
கிடைப்பதில்லை

நிஜத்தில் நடக்க வேண்டும்
என்று நினைப்பதெல்லாம்
கனவில் நடக்கிறது
கனவில் கூட
நடக்கக் கூடாது
என்று நினைப்தெல்லாம்
நிஜத்தில் நடக்கிறது

சரியான
இலக்கை தேர்வு செய்யாமல்
பூ போன்ற பாதையில்
பயணித்தும் பயனில்லை
(வாழ்க்கை பயணம்)

நமக்கு ஒருவரிடம்
இருந்து மதிப்பு
இல்லை என்று தெரிந்தால்
அவர்களிடம் இருந்து
விலகிவிடுங்கள்
ஒரு நாள் உங்களின்
வருகைக்காக அவர்கள்
காத்திருக்கும் நேரம் வரும்

பொறுமை கடலினும் பெரிதாம்
அதனால்தான் பலரும் அதனுள்
இறங்க மறுக்கிறார்களோ

எப்போதும்
உன்னை புரிந்தவர்களுக்கு
மட்டும்
நீ நல்ல புத்தகமாக
இருந்தால் போதும்
புரியாதவர்க்கு என்றுமே
புதிராகவே இருந்தால்
போதும்
கவலை கொள்ள
தேவையில்லை

பெயரும்
பணமும்
புகழும்
நம்மைத் தேடிவர
உண்மையும்
உறுதியும்
உழைப்பும்
நம்மிடம் இருக்க வேண்டும்

நேசிப்பவர்களை பாராட்டு
தேவை படுபவர்களுக்கு
உதவி செய்
காயபடுத்துபவர்களை
மன்னித்து விடு
விலகி செல்பவர்களை
மறந்தே விடு

எதிர் காலத்தில்
நிம்மதியாக இருப்பேன்
என்று நிகழ்காலத்தை தொலைக்கிறேன்…

புகைப்படம் எடுக்கையில்
மட்டும் புன்னகை என்றாகிவிட்டது
பலரது வாழ்க்கையில்…

நம்மளோட பலம் பலவீனம்
ரெண்டுமே நமக்கு புடுச்சவங்களோட
அன்பு தான்…

கரம் பிடித்தவர்
துணையிருந்தால்
ஆழ்கடலையும்…
அழகாக கடக்கலாம்…

முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்
முயற்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தால்
முழுமையான வெற்றி நிச்சயம்
சிந்தித்து செயலாற்றுங்கள்

அடுத்தவர்களின்
கண்களுக்கு
எப்படியோ
என் விழிகளுக்கு
உலக அழகி
என் அன்னையே…

ஒரு மென்மையான வார்த்தை
ஒரு கனிவான பார்வை
ஒரு அன்பான புன்னகை
ஆகியவற்றால் அதிசயங்களையும்
அற்புதங்களையும் நிகழ்த்திக்
காட்ட முடியும்…

நிழலை
அழித்து
விடாதீர்கள்…
நிஜங்கள்
மறையக்கூடும்…
ஒருநாள் நிரந்தரமில்லாமல்…

உள்ளத்தை
எப்போதும் உளியாக வைத்துக்கொள்
சிலையாவதும் சிறையாவதும்
நீ செதுக்கும்
தன்மையை பொறுத்ததது

நிறைவேறா
கற்பனைகள்…
கனவில்
மட்டுமே
சாத்தியம்
போல…
(ஏக்கங்கள்)

என்றோ
இழந்ததை நினைத்து
இன்று புலம்பாதே
நாளைய
நாள் நல்லநாள்
என்று நினைத்து வாழ்

வாழ்க்கை
ஒரு அனுபவமுங்க
நல்ல அனுபவம்
கிடைச்சா பரவசப்படணும்
மோசமான அனுபவம்
கிடைச்சா பக்குவப்படணும்
அனுபவிங்க வாழ்க்கையை…

வாழ்க்கையை பாரமென்று
நினைத்தால்
நம் சந்தோஷங்களும்
தூரம் தான்

எந்திர
வாழ்க்கையை
வாழ கற்றுக்
கொண்ட நமக்கு
நம்மை பற்றி
யோசிக்க நேரமில்லை…

எந்த அவமானத்தையும்
வலியாய் எடுத்துக்கொள்ளாதீர்
வழியாய் எடுத்துக்கொள்ளுங்கள்
இங்கே கை தூக்கி
விடுபவர்கள் விட
கை தள்ளி கீழே
விழவைப்பவர்களே அதிகம்
வாழ்வை வெல்வோம்

அத்தனை எளிதாக
யாருக்கும் கிடைத்து
விடாதீர்கள்
நம் மதிப்பு தெரியாமல்
போவதால்
மிகவும் எளிதாகவே
தூக்கி வீசப்படுவீர்கள்

விட்டுக்கொடுத்தே
பழகியவர்களுக்கு
விரும்பம் என்பதன்
உணர்வே மறந்து போகிறது

ஏதோ ஒரு இழப்பிற்காக
வருந்தியதில் தவறில்லை
ஆனால்
அதே விஷயத்திற்காக
மறுபடியும் நினைத்து
வருந்துவதெல்லாம்
ஆகச்சிறந்த அறைவேக்காட்டுத்தனம்

நம்மை புரிந்துக்கொள்ள
யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்
சொல்லி புரியவைக்க
நம் வாழ்க்கை
ஒன்றும் புத்தகமில்லை

காலம் கனிந்து வரும்
என்று எதிர்பார்க்காதே
எதை செய்தாலும் அதில்
உன் உழைப்பு
இல்லை என்றால்
சிறு துரும்பு கூட
உனக்கு உதவ
முன் வராது

நீங்கள் வாழ்வில்
முன்னேறி சென்றாலும்
கடந்து வந்த வாழ்க்கையை
மறக்காதீர்கள்
ஏனெனில்
உயர பறக்கும்
பறவை கூட
தாகத்திற்கு தரையை
நோக்கி தான் வருகிறது

மிகப் பெரிய
சாதனை படைக்க
விரும்பினால்
அதற்கான முயற்சியில்
சில காலம்
காணாமல் போக
தயாராக வேண்டும்

இருப்பதை யாரும்
பார்ப்பதில்லை
இல்லாததை தேடி தான்
பயணிக்கின்றனர்
இருப்பதோடுவாழ்
உனக்கு வரவேண்டியது
உன்னை வந்தடைந்தே தீரும்

பிடித்தவர்களிடம் அன்பாய்
இருப்பதை விட
உண்மையாய் இருங்க..
அன்பை விட உண்மை
அதிக மகிழ்ச்சியானது..
அதிக ஆழமானது..

தூரம் என்பது
இடங்களுக்கு தான் நம்
இதயத்துக்கு அல்ல…

சில சிறந்த தருணங்களுக்காக
காத்திருக்கும் பொழுதுகளில்
பல சிறந்த வாய்ப்புகள்
நம்மை கடந்து சென்றுவிடும்…

ஒரு முறை
உதவி செய்யதவறினால்
செய்த உதவிகள்
அனைத்தையும் மறந்து
அவர்களை தூக்கியெறிந்து
விடுகிறது சுயநல மனம்…

உதவி செய்ய
வேண்டும்
என மனம் இருந்தால்
மட்டும் போதும்
மற்றவை அவசியமற்றவை
நற்குணங்களாக…

நல்ல
விதை விதைத்தால்
தான் செடி
நன்றாக வளர்ந்து
நல்ல பலனை
கொடுக்கும்…!
அது போல
நல்ல எண்ணங்கள்
இருந்தால் தான்
வாழ்க்கை பிரகாசிக்கும்…!

வாழ்க்கையில் சாதிக்க
பொறுமை அவசியம்
நாம் என்ன செய்கிறோம்
என்று நம்மை சுற்றி உள்ளவர்கள்
தான் அதிகம் எதிர்பார்ப்பார்கள்
விமர்சனம்
கேலி
கிண்டல்
எதையும் பொருட்படுத்தாமல்
உங்களது குறிக்கோளில் மட்டும்
கவனத்தை செலுத்துங்கள்
வாழ்க்கையில் சாதிக்க
பொறுமை மிகவும் அவசியம்
உங்கள் உழைப்பின்
மீது நம்பிக்கை வையுங்கள்
வெற்றி உங்களை தேடி வரும்

பிடித்தவர்கள் சொல்லும்
அன்பான காலை வணக்கமும்
பிடித்தவர்கள் சொல்லும்
பிடித்த வார்த்தைகளும்
அன்றைய நாளை
மேலும் சிறப்பான
நாளாக அமைகிறது
அனைவருக்கும் சிறப்பான
நாளாய் அமைய வாழ்த்துக்கள்

நல் நிகழ்வுக்கு
ஆதரவு கொடுங்கள்
நல் சிந்தனைக்கு
வாழ்வு கொடுங்கள்
தன்னிலை
உணர்ந்த போதும்
பிறர் நிலை உணரும்
தர்மனாக இருங்கள்
வாழும் நாட்கள் சிறிதே
நல்மனிதனாக வாழும்
மகத்துவத்தை பெறுங்கள்

மனநிலைக்கு
தகுந்தாற்போல்
பேசி விடாதீர்கள்
மனநிலை மாறலாம்
ஆனால்
பேசிய வார்த்தை மாறாது

நேற்றைய தவறுகளையும்
இழப்புகளையும்
கை தவறி சென்ற
வெற்றிகளையும்
இழந்த உன்னதமான
உறவுகளையும்
மீண்டும் சரி செய்ய
கிடைத்த ஒரு வாய்ப்பாக
இன்றைய விடியலை
பயன்படுத்துவோம்

உரிமை உள்ள இடத்தில்
கோபத்தை காட்டிணாலும்
புரிந்துகொள்வார்கள்
உரிமை இல்லாத இடத்தில்
புன்னகைத்தாலும்
புறக்கணித்து விடுவார்கள்

வாழ்க்கை Online
அன்பு Offline
மனது என்றுமே Pending
கவலை நாளுக்கு நாள் Updating
பிரச்சினை எப்படியும் Incoming
பணம் என்றுமே Outgoing
ஆனாலும் நான் Working
சந்தோஷம் மெதுவா Downloading

கானல் நீரை பருகுவதால்
தாகம் தீராது
இன்று விதைதால்
இன்றே மரமாகாது
நதிகளை போல
இயல்பாகஓட கற்றுக்கொள்ளுங்கள்…!

காலம்
நம்பிக்கைகளின் தொட்டில்
ஆசைகளின் கல்லறை
முட்டாள்களுக்குக் கற்றுத்தரும்குரு
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்

உண்மையான அக்கறையோடு
ஒருவர் கூறும்
அறிவுரைகளை கடைபிடிக்காவிட்டாலும்
பரவாயில்லை
அறிவுரை கூறும்போது
சிரித்து அவமானப்படுத்தாமலாவது
இருக்கலாம்…!

வாழ்வில்
இரு போராட்டம்தான்
ஜெயித்தவர் தக்கவைத்துக்கொள்ளவும்
தோற்றவர் ஜெயிக்கவும்
போராடுகிறார்…!

நெருக்கங்கள்
குறைய
குறைய
விவாதங்களும்
பின்னர்
விரோதங்களும்
எழுகின்றன
அனுபவமாக…

நாம் எடுக்கும்
சில பல முடிவுகள்
பிறர்க்கு
நகைச்சுவையாய்
இருந்தாலும்
அதன்
காயத்தை
நாம் மட்டுமே
உணர்ந்திருக்க
முடியும்…
மனநிலை – பொறுத்தே

கடந்த காலங்களை
நம்மால் மாற்றவோ
மறக்கவோ
திருத்தியமைக்கவோ முடியாது
நடந்தவைகளை
ஏற்கத்தான் வேண்டும்
ஆனால் எதிர்காலத்தை
மாற்றமுடியும்
இறுதியான முடிவினை
உறுதியாக எடு

தன்னம்பிக்கை
இல்லாத வாழ்க்கை
சுகர் இல்லாத காஃபி
மாதிரி தான்
என்ன தான்
வாசமா இருந்தாலும்
ருசியா இருக்காது

உண்மை
ஒரு சில நேரத்தில்
மன வருத்தம் தான்
பேசும் பொய்
எப்போது உடையும்
என நினைக்க நினைக்க
மன அழுத்தம் தான்
அதற்கு உண்மையாகவே
இருந்துவிடலாம்…

பயந்து பயந்து
வாழ்வதைவிட
துணிந்து எதிர்த்திடு
மரணம் ஒருமுறைதான்

உலகத்தின் பார்வையை
நம்மால் மாற்றமுடியாது
நம் பார்வையில் பாதையில்
நாம் தெளிவாயிருப்போம்

நாம தடுக்கி விழுந்தா
தூக்கிவிட இரண்டு கைகளும்
ஏறிமிதிக்க நான்கு கால்களாவது
காத்திருக்கும்…!

என்றும் அஞ்சியே
வாழ்ந்தால் இறுதி
அஞ்சலியே நிகழ்த்தப்படும்
துச்சமென்று துணிவுடன்
நடந்தால் வாழ்வு
நம் வசப்படும்

நல்லுள்ளங்களிடம்
உங்கள் மூளையை
ஆன் செய்து வையுங்கள்…!
போலி உறவுகளிடம்
உங்கள் எண்ணங்களை
ஆப் செய்து விடுங்கள்…!

ஜனநாயகம் ஓர் அரசாங்க
வடிவம் மட்டுமல்ல, அது ஒரு
கூட்டு வாழ்க்கைமுறை.
சக மனிதர்களுக்கு மதிப்பும்
மரியாதையும் செய்யும் மனப்பாங்கு!

அம்பேத்கர் எவராவது தான் தன்னுடைய
வாழ்நாளில் ஒரு பிழையும்
செய்ததில்லை என்று நினைத்தால்
அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய
முயற்சிகளை செய்து பார்த்ததில்லை
என்று பொருள்.

ஐன்ஸ்டைன் அறிவு ஒன்றுதான் அச்சத்தை
முறிக்கும் அரிய மருந்து. அறிவை
வளர்த்துக் கொண்டால்
எல்லாவிதமான பயங்களும்
அகன்றுவிடும். உனக்குப் பெருமை வேண்டுமானாலும்
உற்சாகம் வேண்டுமானாலும்,
பிற மனிதனுக்குத் தொண்டு
செய்வதில் போட்டி போடுவதன்
மூலம் தேடிக்கொள்!

பலரும், தங்களது சூழ்நிலை
சரியில்லை என்றே குறைப்பட்டுக்
கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ
எழுந்து, தங்களுக்கான
சூழ்நிலையைத் தேடுகிறார்கள்;
அத்தகைய சூழ்நிலை
கிடைக்கவில்லையெனில்,
அவர்களே உருவாக்குகிறார்கள்.

உயரத்தில் செல்ல
உயரத்தில் உள்ளவர்களை
நோக்கிடு
நாம் இன்னும்
உயர வேண்டும் என்று
உயரத்தில் சென்று
தாழ்வில் உள்வர்களை
நோக்கிடு
நாமும் இங்கிருந்து
தான் உயர்ந்தோம் என்று

தேவை இல்லாதவற்றை
தூக்கி எறிந்தால் தான்
தேவையானவற்றை மட்டும்
தக்க வைத்துக்
கொள்ள முடியும்
அது பொருளாக
இருந்தாலும் சரி
உயிராக இருந்தாலும் சரி

நாம்
எந்த இடத்தில் இருக்கிறோம்
நமக்கான பொறுப்புகள்
என்ன என்று
உணர்ந்தாலே போதும்
வாழ்க்கையில் தெளிவும்
நற்பெயரும்
விரைவில் கிடைக்கும்

அடுத்து
என்ன நடக்குமென்று
தெரியாமல்
நகர்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையும்
சுவாரஸ்யமானதே

தனிமை
எனக்கு ரொம்ப
புடிக்கும் காரணம்
என் மனதை
காயபடுத்த
அங்கே யாரும்
இருப்பதில்லை

எப்புடி
வேணா வாழ்வங்கறதுக்கு
பேரு வாழ்க்கை இல்லை
இப்படித்தா வாழ்வங்கறதுக்கு
பேரு தான்வாழ்க்கை
தன்னம்பிக்கை
அதிகம் கொண்ட மனிதன்
தன் தேவைக்காக எதற்க்கும்
எங்கும் கைகட்டி நின்றதில்லை
முடியும் வரை போராடு
சற்று ஓய்வெடுத்து
மீண்டும் போராடு
ஏனெனில்
இந்த உலகம்
மிகப் பெரியது

தனக்கென
ஒரு பாதையை
உருவாக்கிக் கொள்ள
முனைந்தவன்
பயணத்தில் வரும்
தடங்கல்களை கண்டு
துவண்டு விடாமல்
எவ்வளவு இடர்ப்பாடுகளையும்
கடந்து முன்னேற
மட்டுமே துடிப்பான்
பாதையும் நமதே
பயணமும் நமதே
வாழ்க்கையும் நமதே
வெற்றியும் நமதே

விக்கல்
வரும்போதெல்லாம் யாரோ
உன்ன நினைக்குறாங்க
என்றவுடன்
யாரோ ஒருவரை
நம் மனதும்
நினைக்கத்தான் செய்கிறது
(நினைவுகள்)

நாளைய
அதிஷ்டத்தை நம்பி
இன்றைய வாய்ப்புகளை
தட்டி கழிப்பவர்
எப்போதும்வெற்றி பெறமாட்டார்கள்

இறந்த பின்நல்லவன்
என்று கூறும் சமூகம்
இருக்கும் போது
கெட்டவன் என்று
புறம் தள்ளும்…!

நமக்கு பிடித்தவர்களோ
அல்லது நம் உறவுகளோ
நாம் பேசும் போது
அதனை கேலி செய்தாள்
அவர்களை விட்டு
சற்று விலகியே இருங்கள்
இல்லை என்றால்
சில நேரங்களில்
அது ஒரு வாக்குவாதமாக
முடிந்துவிடுகிறது…!

வாழ்க்கையில்
இக்கட்டான சூழ்நிலையில்
தள்ளப்படும்போதுதான்
சிலரரின் சுய ரூபம்
வெளிப்படுகின்றது
உதவி என்று அவர்களிடம்
கையேந்தும்போது…!

வாழ்க்கைல
ரொம்ப நேர்மையா இருந்தா
எடிசனுக்கு கெடச்சது
தான் நமக்கும்
(பல்பு )

எப்படியெல்லாமோ
வாழ வேண்டும்
என ஆசைப்பட்டு
ஒரு கட்டத்தில்
எப்படியாவது
வாழ்ந்தால் போதும்
என்ற மனநிலையில்
தள்ளிவிடுகிறது வாழ்க்கை

நீ தனிமையில் இருக்கும்போது
உனக்கு என்ன என்ன தோண்டுகிறதோ
அது தான் உன் வாழ்க்கையைத்
தீர்மானிக்கும்.

சுவாமி விவேகானந்தர். அடிமைகளின் குணமாகிய
பொறாமையை முதலில் அழித்துவிடு.

சுவாமி விவேகானந்தர் பெண்ணாய்ப் பிறப்பதற்கே
மாதவம் செய்திருக்க வேண்டும்.

தேசிக விநாயகம் பிள்ளை. ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன்
ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்.

விக்டர் ஹியூகோ. வாழ்க்கையில் முன்னேற,
குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி,
வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை
— இம்மூன்றும் இருந்தால் போதும்
— தாமஸ் ஆல்வா எடிசன் எதிர் காலத்தில் என்ன
நேருமோ என்று கணக்குப்
பார்த்துக் கொண்டே இருப்பவனால்
எதையும் சாதிக்க முடியாது.
முயன்று செயல்களை செய்பவனே
வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

முயற்சியால் புதியவற்றை
தெரிந்து கொள்வதும்
திறமைகளை
வளர்த்துக் கொள்வதுமே
வாழ்வில் முன்னேற்றம்
அடைவதற்கான
எளிமையான வழி

சந்தேகம்
எனும் விதையை
தூவி விட்டு
நாம் மறந்தாலும்
முளைக்க
அது மறப்பதில்லை

விபரம் தெரிந்த
பிறகு தான் தெரிகிறது
விபரம் தெரியாத
வயதில் வாழ்ந்த
அந்த வாழ்க்கை தான்
சொர்க்கம் என்று

யாரும் கண்டுகொள்ளவில்லை
என கலங்காதீர்
உங்களுக்கு நீங்கள்
இருக்கும் போது
நாம் தான் நமக்கு வலிமை
நம்மை நாமே நேசிக்கும்போது
நம்மை விட யார்
நேசித்துவிட போகிறார்கள்

அடுத்தவரிடம்
நீங்கள் உரிமையெடுக்கும்
போது அவர் அதற்கு
தயாரா என்பதை
ஒரு கணம்
யோசித்தே எடுங்கள்
அனுமதியின்றி
எடுக்கும் உரிமை
அர்த்தமற்ற வருத்தங்களை
உண்டாக்கிவிடும்

இறந்தகாலத்தை நினைத்து
வருந்துவதை விட
எதிர்காலத்தை நினைத்து
பயப்படுவதை விட
நிகழ்காலத்தை நினைத்து
சந்தோஷமாக வாழ்ந்து விட்டு
போய்விடு மனிதா

நான் இறைவனிடம்
கேட்பது ஒன்று மட்டுமே
என்னைப் பிடிக்காதவர்களுக்கு
என்னை பாரமாக்கி விடாதே
எனக்கு பிடித்தவர்களை
என்னிடமிருந்து
தூரமாக்கி விடாதே

உலகில் விலை
மதிப்பில்லாத விசயங்கள்
இரண்டு உண்டு
ஒன்று தாய்மையில்
உருவாகி மரணம்
வரை தொடரும்
உண்மையான அன்பு
இன்னோன்று
எதையும் எதிர்பார்க்காமல்
மற்றொருவர் மீது
நாம் வைக்கும் நம்பிக்கை

என்னை சந்தேகி
ஆனால்
இது தான் நானென்று
தீர்மானித்து விடாதே

நம்மீது கோபமே படாத
உறவுகளை விட
கோபப்பட்டாலும்
விட்டு பிரியாத
உறவுகள்
கிடைப்பதெல்லாம் வரமே

நாம் ஒன்றை நினைத்து
ஒரு முடிவு எடுத்தால்
அது நமக்கு எதிர்மாறாக
அமைந்து விடுகிறது
சில மனித மனங்களை
போலவே

அறியாமல் செய்த தவறை
மன்னிக்க தெரியாத
மனிதர்களிடம் அறிந்து
செய்த தவறுக்கு
மன்னிப்பை எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்

பணம் பணம்
என்று ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
மனதை நேசிக்கும்
உறவுகள் கிடைத்தால்
தொலைத்துவிடாதீர்கள்

அவசரமாக
எடுக்கபடும் முடிவுகள்
அதிஷ்டத்தை போன்றது
ஏதோவொரு நேரத்தில்தான்
நன்மையைதரும்
சிந்தித்துசெயல்படுங்கள்

பிடித்த வாழ்க்கையை
அமைத்துக்கொள்கின்றேன்
என்று
கிடைத்த வாழ்க்கையை
தொலைத்துவிடாதீர்கள்

வாழ்க்கை என்ற ஆற்றையோ,
கடலையோ கடப்பதற்குப் பெண்
என்ற படகோ, கப்பலோ அவசியம்
தேவை – காண்டேகர்

எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக
நடத்தப்படுகின்றனரோ
அந்த இடத்தில் தேவதைகள்
குடியிருக்கின்றனர்
மகாபாரதம்

பழமையைப் பற்றி ஒன்றுமே
தெரியாமல் புதுமையைச்
சிறப்பாகப் படைக்க முடியாது

தியாகம் தான் வாழ்க்கை,
இது இயற்கை கற்றுத் தந்த பாடம்
காந்திஜி
கெட்ட உள்நோக்கத்தோடு
கூறப்படும் ஒரு உண்மை,
ஆயிரம் பொய்களைவிட
மோசமானதாகும்
சார்லஸ் டூபி பிளேக்

அப்பாவியாவும்
இருக்க கூடாது
அடப்பாவின்னு
சொல்லுற மாதிரியும்
இருந்திர கூடாது
அப்பாடான்னு
நிம்மதியா ஒரு வாழ்க்கையை
வாழ்ந்திட்டு போயிறனும்

அழகற்றவர் என்று
யாரையும் ஒதுக்கிவிடாதே
அங்கும் இதயம்
துடித்துக்கொண்டிருக்கும்
(படித்ததில் – பிடித்தது)

நாளை என்பது
வெறும் கனவு
கனவு சில நேரம்
கானல் நீரே
இன்று மட்டுமே நிஜம்
நிஜத்தோடு போராடு
கனவை மறந்து…

பிறர்
நம் மீது
வீசும் ஊசி
போன்ற வார்த்தைகள்
நமக்கு அளிக்கும்
உயர்தர சிகிச்சையாம்
(அக்குபங்சர்)

நேசிக்கும்
நூறு பேரை
நேசிக்க
துவங்கினாலே
வெறுக்கும்
நான்கு பேரை
பற்றி யோசிக்க
நேரமிருக்காது…

உன்னை வழிநடத்த
அறிவை பயன்படுத்து…!

மற்றவர்களை வழிநடத்த
இதயத்தை பயன்படுத்து…!

Leave a Comment